இந்திய அணியின் படு மோசமான பேட்டிங்! கலாய்த்த பாகிஸ்தான் வீரர்

0
64
shoaib akhtar criticise about india vs australia match
shoaib akhtar criticise about india vs australia match

இந்திய அணியின் படு மோசமான பேட்டிங்! கலாய்த்த பாகிஸ்தான் வீரர்

ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியானது முதல் டெஸ்டில் டாஸ் ஜெயித்து பேட்டிங்யை தேர்வு செய்தது.பிங்க் நிற பந்தில் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி 244 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கோலி 74 ரன்களும், புஜாரா 43 ரன்களும் எடுத்திருந்தனர்.சொல்ல போனால் இந்திய அணி முதல் இன்னிங்சை மிகவும் சிறப்பாகவே விளையாடியது.

பிறகு பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியானது 244 ரன் எடுக்க முடியாமல் திணறி வெறும் 191 ரன்களில் சுருண்டது.இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சிறப்பாக விளையாடி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதேபோல் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும் எடுத்தார்.

இதனையடுத்து 53 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்யை துவங்கிய இந்திய அணிக்கு, தொடக்கம் முதலே சருக்கல் ஆரம்பித்தது ஜூனியர் பேட்ஸ்மேன் முதல் சீனியர் பேட்ஸ்மேன்கள் வரை அனைவருமே ஒற்றை இலக்க ரன்களோடு வந்த நிமிடத்திலேயே வெளியேறினார்கள்.இதனால் 9 விக்கெட்டுக்கு வெறும் 36 ரன்கள் மட்டுமே இந்திய அணியால் எடுக்க முடிந்தது. ஷமி காயம் காரணமாக பேட்டிங் செய்யாமல் வெளியேறினார்.

இதனையடுத்து 93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 21 ஓவரிலேயே அசால்டாக இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியும் பெற்றது.டெஸ்ட் மேச்சில் இந்திய அணி எடுத்த மிக குறைந்த ஸ்கோர் இதுவாகும்.இதனையடுத்து இந்திய அணியின் மோசமான பேட்டிங்கை அனைவரும் கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

அதிலும் குறிப்பாக முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கிண்டலாக ஒரு டுவிட் செய்துள்ளார்.அவர் பதிவிட்டுள்ள அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது-நான் தூங்கி எழுந்து பார்க்கும் போது 369 ஆக இருந்தது.இதை நம்ப முடியாமல் எனது கண்களை கழுவிட்டு வந்து பார்த்தேன் இந்திய அணியின் ஸ்கோர் 36/9 ஆக இருந்தது.இதை என்னால் நம்பமுடியவில்லை.அதனால் நான் மீண்டும் தூக்க சென்று விட்டேன், என்று கிண்டலாக டுவிட் செய்துள்ளார்.

மேலும் வேகப்பந்து வீச்சாளர் ஷமிக்கு காயம் எற்பட்டுள்ளதால் அடுத்த டெஸ்ட் மேச்சில் நமது தமிழக வீரர் நடராஜன் அவருக்கு பதிலாக விளையாட உள்ளார் என்று கூறப்படுகிறது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தனது முதல் ஒரு நாள் போட்டி மற்றும் 20 -20 போட்டிகளில் நன்றாக விளையாடி அனைவரின் மனதையும் அவர் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்து டெஸ்ட் மேட்சிலும் சிறப்பாக விளையாடி தமிழகத்திற்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.அடுத்த டெஸ்ட் மேட்சில் இந்திய அணியின் செயல் எவ்வாறு இருக்கும் என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

author avatar
Parthipan K