73 ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்ட பழமையான சிவாலயத்திற்கு குடமுழுக்கு விழா

0

73 ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்ட பழமையான சிவாலயத்திற்கு குடமுழுக்கு விழா

அரியலூர் மாவட்டம்,தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள செளந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் ஆலயம் 73 ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்டு இன்று குடமுழுக்கு விழா சிறப்பாக நடைப்பெற்றது.

இந்த குடமுழுக்கு விழாவில் சுற்றுவட்ட மாவட்டத்திலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.

இராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீசுவரர் கோவிலை போன்றே வரலாற்று சிறப்பு மிக்க பல்வேறு சிவாலயங்கள் உள்ளது.

திருஞானசம்பந்தர்,அப்பர்,சுந்தரர் ஆகிய மூவர் தேவாரம் பெற்ற கீழப்பழூவூர் ஆலந்துறையார், திருமழைபாடி வைத்தியநாத சுவாமி, கோவிந்தபுத்தூகங்காராஜடேஸ்வரர், அண்மையில் அமெரிக்க நாட்டில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட திருபுரந்தான் நடராஜர் சிலை என சிறப்பு மிக்க கோவில்களின் வரிசையில் உள்ள கோவில் தான் காரைக்குறிச்சி செளந்தர நாயகி அம்பாள் சமேத பசுபதீசுவரர் ஆலயம்.

கோவிலின் சிறப்புகள் அம்சங்கள்

  1. ஆண்டுதோறும் சித்திரை மற்றும் ஆவணி மாதங்களில் சூரிய பகவான் தனது கதிர்களால் சிவபெருமானை வழிபடுதல்.
  2. திருவிசை நல்லூர்க்கு பிறகு சௌந்தரநாயகி அம்பாள் மற்றும் லஷ்மி நாராயணன் ஒரே இடத்தில் நமக்கு காட்சித் தருகிறார்கள்..
  3. லட்சுமி நாராயணன் உடன் கருட ஆழ்வார் நம்மாழ்வார் சேர்ந்து காட்சி அளிப்பதும் சிறப்பு வாய்ந்தாகவும் கருதப்படுகிறது.
  4. துர்க்கை அம்மன் அஷ்டபுஜ துர்க்கையாக எட்டு கரங்களுடன் காட்சி மற்றும் நவகிரகங்களில் ஒன்றான சனி பகவான் சற்று தனித்து நமக்கு காட்சி தருவதும் இந்த கோவிலின் சிறப்பம்சம்.

Copy

Leave A Reply

Your email address will not be published.

WhatsApp chat