மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி..? யாரெல்லாம் விரதம் இருக்கலாம்.! அரிய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்!!

0
85

மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி..? யாரெல்லாம் விரதம் இருக்கலாம்.! அரிய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்!!

சிவராத்திரியில் எல்லா சிவன் கோயில்களிலும் சிறப்பான வழிபாடுகள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

மாசி மாதம் வருகின்ற தேய்பிறை சதுர்த்தசி திதி ராத்திரியையே நாம் மகா சிவராத்திரியாக கொண்டாடுகிறோம். இந்த இனிய நாளில் சிவனிடம் மனமுருகி வேண்டுதல் வைத்து விரதம் இருந்தால் நாம் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது தெய்வ நம்பிக்கை.

விரதம் எப்படி இருப்பது..?

அதிகாலை எழுந்து பச்சை நீரில் குளித்து தூய ஆடைகளை உடுத்தி வீட்டு பூஜை அறையில் அமர்ந்து இரு கைகளை வணக்கம் வைத்தவாறு மேலே உயர்த்தி “தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்ற பக்தி வாசகத்தை மூன்றுமுறை வாய்விட்டு கூறவும். பின்னர் கையை இறக்கிவிட்டு எம்பெருமானே இந்த நன்னாளில் நான் உமக்காக விரதம் இருக்கப் போகிறேன்’ என் விரதமும், வேண்டுதலும் எந்த தடங்களும் எந்த தடங்களும் இல்லாமல் நடைபெற வேண்டும் என்று மனதில் வேண்டிக் கொள்ளலாம்.

விரதம் தொடங்கிய பிறகு சிவனின் ஒரே நாமம் “ஓம் நமசிவாய” எனும் நாமத்தை விரதம் முடியும்வரை சொல்லிக் கொண்டே இருங்கள். விரதம் இருப்பவர்கள் மூன்று வேளையும் உண்ணாமல் இருப்பது நல்லது. முடியாதவர்கள் ஒருவேளை உணவு மட்டும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது இரண்டு வேளை பால் பழம் மட்டும் எடுத்துக் கொண்டு ஓம் நமசிவாய எனும் மந்திரத்தை விரதம் முடியும் வரை சொல்ல வேண்டும்.

காலை வீட்டில் விரதம் முடிந்து மாலை நேரம் அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்கு சென்று நான்கு கால வழிபாட்டில் கலந்து கொள்ளுங்கள்.

முதல் காலம்: சோமாஸ்கந்தரை வழிபட வேண்டும்

இரண்டாம் காலம்: தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்

மூன்றாம் காலம்: லிங்கோத்பவரை வழிபட வேண்டும்.

நான்காம் காலம்: சந்திரசேகர் என்னும் ரிஷபாரூடரை வழிபட வேண்டும்.

இதுபோன்று முறையாக சிவனின் நாமத்தை நினைத்து, நான்கு காலத்தை வழிபடுவதன் மூலமே உங்களுடையை விரதம் முழுமை அடையக்கூடும். இந்த விரதத்தை முழுமையாக கடைபிடித்தால், மன அமைதி, ஆன்மீக சிந்தனை, அறிவுக்கூர்மை, கட்டுப்பாடான ஒழுக்கம், வீட்டில் செல்வம் பெருகுவது மற்றும் பல நல்ல விஷயங்கள் நடைபெறும். அகத்தின் ஈடுபாடு கொண்டவர்கள் மட்டுமே விரதம் இருக்கலாம்.

குறிப்பு: விரதம் இருக்கிறேன் என்கிற பெயரில் குடும்பத்தோடு அரட்டை அடிப்பது, கண்விழித்து சினிமா பார்ப்பது போன்ற செயல்களால் எந்த நன்மையும் கிடைக்காது.
ஆழ் மனதில் ஆடவல்லானை தரிசித்து அமைதியை பெறுவதே விரதம் பெறுவதற்கான வழிமுறையாகும்.

author avatar
Jayachandiran