திடீரென ஹோம்லியாக மாறிய ஷெரின்! வாயை பிளந்த ரசிகர்கள்!

0
69

துள்ளுவதோ இளமை என்ற திரைப்படம் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளிவந்தது இந்த திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் கதாநாயகியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் நடிகை ஷெரின். இதன்பிறகு விசில், ஸ்டூடண்ட் நம்பர் ஒன் உற்சாகம் போன்ற திரைப்படங்களில் அவர் நடித்திருக்கிறார்.

அதன்பிறகு திரைத்துறை பக்கமே தலை காட்டாமல் இருந்து வந்த நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாம் பாகம் நிகழ்ச்சியில் இடம்பெற்றார். அதன்பிறகு மக்களுடைய மனதில் இடம் பிடிக்க ஆரம்பித்தார் அவருடைய வயதுடைய பல நடிகர்களும், நடிகைகளும், திருமணம் முடித்துக் கொண்ட சூழலில் ஷெரின் தற்சமயம் திரைத்துறையில் மறுபடியும் தன்னுடைய அங்கீகாரத்தை நிரூபிக்க செய்யும் நடவடிக்கையில் இறங்கி இருப்பதாக சொல்கிறார்கள்.

அவர் பிக்பாஸில் பங்கேற்ற சமயத்தில் உடல் பருமனுடன் இருந்திருக்கிறார். ஆனால் தற்சமயம் உடல் எடையை குறைத்து மிகவும் மெலிந்த தோற்றத்தை அடைந்திருக்கிறார். இந்த நிலையில், லாக்டவுன் தொடங்கியதிலிருந்து சேலை மற்றும் சுடிதாரில் பலவகை புகைப்படத்தை எடுத்து உடல் எடையை குறைத்து அடுத்தடுத்து புகைப்படம் பதிவு செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

எப்போதும் மாடர்ன் உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் அவர் தற்சமயம் குடும்ப பாங்காக மாறி புடவை சுடிதார் போன்றவற்றை உடுத்திக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். தற்சமயம் செரின் தனுஷ் மற்றும் இன்னும் பிற நடிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு விருப்பங்களும் குவிந்த வண்ணம் இருக்கின்றன.