“எல்லாம் சரிதான்… ஆனா இந்த ஒரு பிரச்சன இருக்கே….” இந்திய அணியின் பலவீனம் குறித்து ஷேன் வாட்சன்!

0
79

“எல்லாம் சரிதான்… ஆனா இந்த ஒரு பிரச்சன இருக்கே….” இந்திய அணியின் பலவீனம் குறித்து ஷேன் வாட்சன்!

இந்திய அணியில் பந்துவீச்சு கூட்டணிதான் பலவீனமாக உள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட்டர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.

2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த முதல் உலகக்கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பிறகு இந்திய அணியால் தோனி, கோலி என இரு திறமையான கேப்டன்கள் வழிநடத்தியும் வெல்ல முடியவில்லை. அதனால் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆசை இந்திய ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த முறை வலுவான பேட்டிங் மற்றும் பந்துவீச்சு கூட்டணியோடு இந்திய அணி களமிறங்குகிறது. ஆனாலும் பவுலிங்கில் பூம்ரா மற்றும் ஜடேஜா இல்லாதது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதுபற்றி பேசியுள்ள ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட்டர் ஷேன் வாட்சன் “இந்திய அணியின் பேட்டிங் மிக வலுவாக உள்ளது. இந்தியா அணியின் சுழல்பந்து வீச்சும் பலமாக உள்ளது. ஆனாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இந்திய அணியின் பலவீனமாகதான் உள்ளது. அணியில் இருக்கும் பவுலர்களால் டெத் ஓவர்களை சமாளிக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.

கோப்பையை வெல்வது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா “இந்திய அணி 15 ஆண்டுகாலமாக உலகக்கோப்பையை வெல்லவில்லை. ஆனால் இம்முறை கோப்பையை வெல்ல பல்வேறு யூகங்களை வகுத்துள்ளோம். இந்திய மைதானங்களில் விளையாடுவதற்கும் இங்கு விளையாடுவதற்கும் வித்தியாசம் உள்ளது. ஆனால் நாங்கள் இரண்டு தொடர்களை வென்ற மகிழ்ச்சியோடு வந்துள்ளோம்.” எனக் கூறியுள்ளார்.