மானமில்லாதவர்கள் மான நஷ்ட வழக்கு போடுவதா? செந்தில் பாலாஜி குறித்து அண்ணாமலை காட்டம் 

0
75

மானமில்லாதவர்கள் மான நஷ்ட வழக்கு போடுவதா? செந்தில் பாலாஜி குறித்து அண்ணாமலை காட்டம்

தைரியம் இருந்தால் என் மீது செந்தில் பாலாஜி வழக்கு பதிவு செய்து பாருங்கள்…
மின்வாரியத்தின் அடுத்தடுத்த ஊழல்கள் வெளியிடப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்…

கனல் கண்ணன் பேசியது தவறு என்றால்… திமுக காரர் பேசுவது பாவம்…
ஆயிரம் பேர் செல்லும் ஸ்ரீரங்கம் கோயிலில் பெரியார் சிலை இருக்க வேண்டுமா என கருத்துக் கணிப்பு நடத்தினால் யாரும் சிலை வேண்டாம் என்று தான் வாக்களிப்பார்கள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்…

மத்திய அமைச்சராக ராசா இருந்தபோது தன்னிச்சையாக சில நிறுவனங்களுக்கு ஆதாயமாக செயல்பட்டார். ஆனால் இதுவரை இல்லாத அளவிற்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அதிக வருமானம் மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்..

பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது,

கடந்த இரண்டு நாட்களாக பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் நிதி அமைப்பைப் பற்றி பேசியது தமிழ்நாட்டின் பட்டிதொட்டி எங்கும் பரவியுள்ளது.தமிழ் நாட்டை சார்ந்த அனைத்து எம்பிக்களும் வெளிநடப்பு செய்து விட்டார்கள். அவர்கள் உண்மையை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் வெளியேறிவிட்டார்கள்.

இதுகுறித்து மாநில நிதியமைச்சர் பேச்சில் முரண்பாடு உள்ளது.இந்தியா தான் உலகில் உள்ள நாடுகளில் வேகமாக வளர்ந்து வரும் நாடு.வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் நாம் முன்னணியில் உள்ளோம். 7.4% தாண்டி நாட்டின் வளர்ச்சி இருக்கும்.

5% ஜி.எஸ்.டி வாரியானது பிராண்டட் உணவு பொருட்கள் மீது தான் போடப்பட்டுள்ளது.இது அனைத்தும் ஜிஎஸ்டி கூட்டத்தில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் அறிக்கை முன்னுக்கு பின் முரணாக உள்ளது. பொய்களை அள்ளி தூவி விடுகிறார்கள்.ஜி.எஸ்.டி யே வேண்டாம் என்கிறார்கள். ஆனால் 2006 ல் காங்கிரஸ் கூட்டணியில் திமுக ஒப்புதல் கொடுத்தது

கூட்டாட்சி தத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் தான் ஜிஎஸ்டி வரி விதிப்பு அமைந்துள்ளது.இது மத்திய மாநில அரசு ஒருமைப்பாட்டை விளக்குகிறது.மத்திய அரசும் எந்த மாநில அரசையும் வஞ்சிக்க முடியாது.

ஜிஎஸ்டி கவுன்சிலில் மாநில நிதி அமைச்சரும் அங்கம் வகிப்பார்கள்.இந்நிலையில் ஆடத் தெரியாதவன் மேடை பார்த்து கோணல் என்பான்” என்னும் பழமொழி போல தான் PTR அறிக்கை உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என தேர்தல் அறிக்கையில் தவறான வாக்குறுதி கொடுத்து விட்டு இப்போது மத்திய அரசை குற்றம் சாட்டுகிறார்கள்.புதுச்சேரி, குஜராத் போன்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மிக குறைவு…

எடப்பாடி ஆட்சி காலத்தில் VAT வரியில் landing tax 13% ஆக மாற்றினார்.அமெரிக்காவில் 51% பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. மேலும் வளர்ந்த நாடுகளில் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது

கனிமொழி அவர்கள் இவையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும். இது பற்றி தனது சகோதரருக்கு தொலைபேசி மூலமாக பேச வேண்டும்.முதல்வரிடம் பெட்ரோல் விலை குறைப்பை அமல்படுத்த வேண்டும் என கனிமொழி அவர்கள் கூற வேண்டும். அதைவிடுத்து பாராளுமன்றத்தில் பேச கூடாது.

மத்திய அரசு தானாக தமிழகத்திற்கு அனைத்து உதவிகளும் செய்கிறார்கள்.தமிழகத்துக்கு 2.3 லட்சம் கோடிக்கு ரயில், போக்குவரத்து மேம்பாட்டுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது.உஜ்வாலா சிலிண்டர் விலை மே மாதத்தில் 200 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 56% மக்களிடம் தான் சிலிண்டர் இருந்தது. தற்போது 92% ஆக அதிகரித்துள்ளது.99.8% மக்கள் பாஜக ஆட்சியில் LPG சிலிண்டர் உபயோகிக்கிறார்கள்.சிலிண்டர் பயன்பாடு அதிகமாகி விட்டது, சர்வதேச சந்தையில் விலை ஏற்ற இறக்கம் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.

கேரளா, மேற்கு வங்காளம், டெல்லி போன்ற மாநிலங்கள் ஏன் ஜி.எஸ்.டி கவுன்சில் பற்றி குறை கூறவில்லை.

5ஜி அலை கற்றை ஒதுக்கீட்டில் 1.5 லட்சம் கோடி பணம் கிடைத்துள்ளது.இதுவரை நடந்த ஏலத்தில் இந்த முறை தான் அதிக பணம் மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது.மத்திய அமைச்சராக ராசா இருந்தபோது தன்னிச்சையாக சில நிறுவனங்களுக்கு ஆதாயமாக செயல்பட்டார்.

2 ஜி ஏலத்தில் 28,000 கோடி வருமானம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 9,000 கோடி தான் வருமானம் கிடைத்தது.பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு மீண்டும் 40,000 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. 2008 ல் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை குட்டி சுவராக்கியது யார்.

பாஜகவின் அரசியல் மத அரசியல் கிடையாது.தில்லை நடராஜரின் நடனத்தை ஒரு Youtube காரர் அவமானப்படுத்தி விட்டார்… அதை கருத்து சுதந்திரம் என சொன்னார்களே.கனல் கண்ணன் பேசியது தவறு என்றால், திமுக காரர் பேசுவது பாவம்.

ஆயிரம் பேர் செல்லும் ஸ்ரீரங்கம் கோயிலில் இந்த சிலை இருக்க வேண்டுமா என கருத்துக் கணிப்பு நடத்தினால் யாரும் சிலை வேண்டாம் என்று தான் வாக்களிப்பார்கள்.”கடவுளை நம்புகிறவன் முட்டாள்” என சொல்பவரின் சிலையை கோவிலுக்கு முன் வைப்பது தான் அரசின் கொள்கையா ?

செந்தில் பாலாஜி ஒரு பாஜக தொண்டர் மீது புகார் அளித்து பார்க்கட்டும்.தைரியம் இருந்தால் என் மீது செந்தில் பாலாஜி வழக்கு பதிவு செய்து பாருங்கள்.மின்வாரியத்தின் அடுத்தடுத்த ஊழல்கள் வெளியிடப்படும்.மானம் இல்லாதவர்கள் மானநஷ்ட வழக்குப் போட்டால் என்ன சொல்வது.

கரூரில் நடந்த கூட்டத்தில் செந்தில் பாலாஜி பற்றி அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், நான் பேசியது தவறு என கூறினால்., செந்தில் பாலாஜி உத்தமன் என தற்போதைய முதல்வர் ஒப்புக்கொண்டால் நான் அரசியலில் இருக்கும் காலம் வரை செந்தில் பாலாஜி பற்றி ஒரு வார்த்தை கூட பேச மாட்டேன்.