புகை போட்ட வீட்டில் ஏற்பட்ட அவலம்! யாரும் எழாத பரிதாபம்!

0
143
Shame on the smoking house! What a pity no one cried!
Shame on the smoking house! What a pity no one cried!

புகை போட்ட வீட்டில் ஏற்பட்ட அவலம்! யாரும் எழாத பரிதாபம்!

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பொன்னி நகர் திருவள்ளூர் தெருவை சேர்ந்தவர் சொக்கலிங்கம். 60 வயதான இவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி புஷ்பவல்லி. 55 வயதான இவர் குடும்ப தலைவியாக உள்ளார். அவரது மகள் மற்றும் பேரன் விஷால் ஆகியோருடன் வசித்து வருகிறார். இவர்களது வீட்டில் கொசு தொல்லை அதிகமாக இருந்துள்ளது.

இதன் காரணமாக நேற்று இரவு வழக்கம் போல அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் படுக்கைக்கு தயாரானார்கள். அப்போது கொசுக்களை விரட்ட வீட்டில் சொக்கலிங்கம் புகை போட்டுள்ளார். பின்னர் அனைவரும் தூங்க சென்று விட்டனர். நள்ளிரவில் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது, அதிகமான புகை எழுந்ததன் காரணமாக அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அனைவரும் படுக்கையிலேயே மயங்கி விட்டுள்ளனர். இன்று  காலையில் வெகு நேரம் ஆகியும் சொக்கலிங்கத்தின் வீட்டு கதவு திறக்கப்படவில்லை என்பதால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், அவரது வீட்டிற்கு சென்று கதவை தட்டி பார்த்தனர். எந்த சத்தமும் ஏற்படாததால் சந்தேகம் அடைந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

நான்கு பேரும் படுக்கையிலேயே மயங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றனர். உடனே ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் புஷ்பவள்ளி உயரிழந்து விட்டார் என்று கூறினார்கள். மேலும் 3 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.