பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் பாலியல் ரீதியான குற்றங்களை விசாரிக்க தனி கமிட்டி!

0
87

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நடக்கும் பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களை விசாரிப்பதற்கு தனி கமிட்டி அமைக்க வேண்டும் என்று பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவிட்டிருக்கிறது.

நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு ஒரு முக்கிய அறிவிப்பை சுற்றறிக்கையின் மூலமாக அனுப்பி இருக்கிறது.

அந்த சுற்றறிக்கையில் பல்கலைக்கழக வளாகங்களிலும், கல்லூரி வளாகங்களிலும், பேராசிரியைகள், மாணவிகளுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்கள் நடைபெற்று வருகின்றன, அதனை தடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோன்று எந்தவிதமான வன்முறை சம்பவங்களும் நடை பெறாத விதத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மற்றும் பாலியல் ரீதியான புகார்களை விசாரிப்பதற்கு தனி கமிட்டி அமைக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் தாமதம் எதுவும் இருக்கக்கூடாது என்றும் தனி கமிட்டியின் விவரங்களை எங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் நாடு முழுவதுமுள்ள உயர் கல்வி நிறுவனங்களுக்கு யூஜிசி செயலாளர் ரஜ்னிஷ்ஜெயின் உத்தரவிட்டிருக்கிறார்.