கோவிஷீல்டு தடுப்பூசி விலையை உயர்த்திய சீரம் நிறுவனம்! அதிர்ச்சியில் மாநில அரசுகள்!

0
95
Covishield
Covishield

கோவிஷீல்டு தடுப்பூசி விலையை உயர்த்திய சீரம் நிறுவனம்! அதிர்ச்சியில் மாநில அரசுகள்!

கொரோனா வைரஸ் பரவி வருவதால், உலக நாடுகள் தடுப்பூசிகளை தயாரிப்பதிலும், மக்களுக்கு விரைந்து போடுவதிலும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தியாவிலும், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

இவற்றை குறைந்த 150 ரூபாய்க்கு வாங்கி நாடு முழுவதும் மத்திய அரசு இலவசமாக விநியோகித்து வந்தது. தடுப்பூசிக்கான தேவை அதிகரித்துள்ளதால் பல்வேறு மாநில அரசுகள், தாங்களே தடுப்பூசிகளை வாங்கிக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் 50% தடுப்பூசிகளை மத்திய அரசுக்கும், 50% தடுப்பூசியை மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யலாம் என அனுமதி அளித்தது.

இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் இந்தியா நிறுவனம், தடுப்பூசிக்கான விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது, மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி 400 ரூபாய்க்கும், வெளி சந்தைகளில் 600 ரூபாய்க்கும் விற்கப்படும் என அறிவித்துள்ளது.

மற்ற நாடுகளின் தடுப்பூசிகளின் விலையை விட தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை மிகக் குறைவு என தெரிவித்துள்ளது. அதாவது, அமெரிக்க தடுப்பூசியின் விலை ஒரு டோஸ் 1,500க்கு மேல் இருப்பதாகவும், ரஷ்ய தடுப்பூசியின் விலை 750 ரூபாயக்கமு மேல் இருப்பதாகவும், சீன தடுப்பூசியின் விலை 750 ரூபாய்க்கு மேல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 முதல் 5 மாதங்களில் தடுப்பூசிகள் சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்றும் சீரம் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசுக்கு ஏற்கனவே விற்கப்படும் விலையான 150 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கு விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், மாநில அரசுகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.