இலவச வாட்சப் பயன்பாட்டிற்கு ஆப்பு வைத்த டிராய்!

0
63

Jioவின் வருகைக்குப் பிறகு எல்லா தொலைத்துடர்பு நிறுவனங்களும், தங்களுடைய கட்டணங்களை மாற்றியமைத்து இன்கமிங் சேவைகளுக்கு கூட கட்டணம் செலுத்த வேண்டும் என்பதைப் போன்ற விதிமுறைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.

ஆகவே இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சமூக வலைதளங்களான வாட்சப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் மூலமாகவும், அழைப்புகளை மேற்கொள்கிறார்கள். இதில் ஆடியோ கால் மட்டுமல்லாமல் வீடியோ கால் மேலும் குழுவாக ஒன்றிணைந்து பேசும் குரூப் சாட் உள்ளிட்டவையும் இருக்கின்றன.

தற்பொழுது வரையில் இலவசமாக வழங்கப்பட்டு வரும் இந்த சேவைகளை இனிவரும் காலங்களில் கட்டணம் செலுத்தி தான் பெற வேண்டும், என்பதைப் போன்ற ஒரு கோரிக்கையை இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் இந்திய தொலைத்தொடர்பு துறையிடம் கோரிக்கை வைத்திருக்கிறது.

இது தொடர்பான கோரிக்கையை கடந்த 2008 ஆம் வருடம் முதல் தாய் முன்வைத்து வருகிறது 2016- 17ம் வருடத்தில் மீண்டும் இந்த கோரிக்கையை முன்வைக்கப்பட்டது. மிக நீண்ட காலமாக கருத்து எதுவும் கூறாமல் இருந்து வந்த இந்திய தொலைத்தொடர்புத்துறை தற்போது அதிகப்படியான விளக்கங்களை வழங்குமாறு ட்ராயிடம் கூறியிருக்கிறது.

அப்படி ட்ராயின் கோரிக்கையை இந்திய தொலைத் தொடர்பு துறை ஏற்றுக்கொள்ளுமானால் தற்பொழுது இலவசமாக வழங்கப்பட்டு வரும் whatsapp, facebook, instagram, google duo, சிக்னல், மற்றும் டெலிகிராம் உள்ளிட்டவற்றில் வழங்கப்பட்டு வரும் இலவச சேவைகள் அனைத்தும் இதன் பிறகு கட்டணம் செலுத்தி மட்டுமே முடியும் எனவும், தெரிகிறது .

ஆகவே ஏற்கனவே இன்டர்நெட்டை பயன்படுத்துவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக, செலுத்தி வரும் பொதுமக்கள் இனிவரும் காலங்களில் அந்த இன்டர்நெட்டை பயன்படுத்துவதற்கு ஒரு கட்டணமும், அதன் மூலமாக பெறப்படும் சேவைகளுக்கு தனியாக ஒரு கட்டணத்தையும், செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் சொல்லப்படுகிறது.