இனி அரசு ஊழியர்களுக்கு தனி செல்போன்! ஐகோர்ட் யின் புதிய உத்தரவு!

0
94
Separate cell phone for government employees now! Icord's new order!
Separate cell phone for government employees now! Icord's new order!

இனி அரசு ஊழியர்களுக்கு தனி செல்போன்! ஐகோர்ட் யின் புதிய உத்தரவு!

மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே அரசு ஊழியர்கள் உள்ளனர். ஆனால் சில அரசு ஊழியர்கள் மக்கள் கேட்டு வரும் கோரிக்கைகளுக்கு சிறிதளவும் செவிசாய்க்காமல் தங்களின் சொந்த வேலைகளை செய்து வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதுகுறித்து மக்கள் பலமுறை புகார் அளித்தும் ஏதும் பயனளிக்கவில்லை. அவ்வபோது அரசு ஊழியர்கள் தங்கள் பணியின் போது போன் பேசுவது வீடியோ எடுப்பது போன்ற சொந்த வேலைகளை பணியின் போதே செய்கின்றனர். இதைப் பார்த்து கோபம் அடையும் சில மக்கள் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் அப்லோட் செய்து விடுகின்றனர். இது காட்டு தீ போல் பரவி மக்கள் மற்றும் அரசாங்கத்திற்கு இடையே பெரும் வாக்குவாதத்தை ஏற்படுத்துகிறது.

மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதே அரசு ஊழியர்களின் கடமை ஆனால் அரசு இவ்வாறாக விதிகளை மீறினால் எப்படி என்று பல கேள்விகளை எழுப்ப தொடங்கிவிடுகின்றனர். திருச்சி சுகாதார மண்டல அலுவலகத்தில் ராதிகா என்பவரால் தற்பொழுது இது தீவிரமாக பட்டுள்ளது. ஏனென்றால் ராதிகா பணி நேரத்தில் வேலை செய்யாமல் தன்னுடன் பணிபுரியும் ஊழியரை வீடியோ எடுத்துள்ளார். அது சமூக வலைத்தளத்தில் பெரும் வைரலானது. இவ்வாறு பணிபுரியும் நேரத்தில் வீடு எடுத்ததால் ராதிகாவை பணியிடை நீக்கம் செய்தனர். மேலும் ராதிகா, அந்த பணியிடை நீக்கத்தில் நீக்குமாறு நீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையானது உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் விசாரித்தார். விசாரணையின் முடிவில் அவர் கூறியதாவது, அரசு ஊழியர்கள் பணிபுரியும் நேரத்தில் தங்களது சொந்த காரியங்களுக்காக தொலைபேசி பயன்படுத்துவது தவறு. அதேபோல அரசு ஊழியர்கள் இவ்வாறு தொடர்ந்து செய்தால் தமிழக அரசு அதற்கு அனுமதி வழங்க கூடாது என்று கூறினார். ஏதேனும் அவசர வேலையால் மற்றவரை தொடர்பு கொள்ள வேண்டுமானால் தங்களின் மேல் உள்ளவர்களிடம் அனுமதி பெற்று செல்போனை பயன்படுத்தலாம் என்று தெரிவித்தார். மேலும் தமிழக அரசுக்கு பல கட்டுப்பாடுகளை அமல்படுத்துமாறு கூறினார்.

அதில், முதலாவதாக அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்துவது போன்ற காரியங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்ப வேண்டும். இந்த இந்த சுற்றறிக்கை உத்தரவானது 4 வாரங்களுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அலுவலக பயன்பாட்டிற்காக தனி செல்போன் போன்றவை வைத்துப் பயன்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.