தமிழகத்தில் பெய்யவிருக்கும் பேய்மழை! தப்பிக்குமா தமிழகம்?

0
87

தமிழ்நாட்டில் இன்றைய தினம் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் உள்ளிட்டவற்றின் காரணத்தால் நாளை கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மற்ற மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக்கூடிய உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

வரும் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி தென்மாவட்டங்களில் மற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் மற்ற மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்து இருக்கிறது.

வரும் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மற்றும் கூரை காற்றுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை வரை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்து இருக்கிறது. அதோடு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மற்ற மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்து இருக்கிறது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் நகரத்தின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. குறைந்தபட்ச வெப்பநிலை 26 செல்சியஸ் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் என்றும், கூறப்பட்டு உள்ளது.