பண மோசடி வழக்கில் சிக்கும் செந்தில் பாலாஜி!! சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு!!

0
124

பண மோசடி வழக்கில் சிக்கும் செந்தில் பாலாஜி!! சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு!!

தற்பொழுது திமுக ஆட்சியில் மின்சார துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி 2011 முதல் 2015 ஆம் ஆண்டு காலத்தில் அதிமுகவில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.

பின்பு இவர் திமுகவில் இணைந்து தற்பொழுது மின்சார துறை அமைச்சராக பதவி வகித்துள்ள நிலையில், முன்பு அதிமுகவில் போக்குவரத்து துறையில் இருந்த பொழுது பலருக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் குறிய அரசு வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடி செய்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், இவர் இவ்வாறு பண மோசடி செய்தது குறித்து பதில் அளிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை உத்தரவிட்டது.

ஆனால் இவ்வாறு அவர் நேரில் ஆஜர் அவது குறித்து அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

இதனையடுத்து அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் கொடுத்து ஏமாற்றிய நபர், இவ்வாறு ரத்து செய்த வழக்குமீது மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கானது இன்று அமர்வுக்கு வந்த நிலையில் , செந்தில் பாலாஜி மீது உள்ள பண மோசடி வழக்கு குறித்து உரிய பதிலை அமலாக்கத் துறை தெரிவிக்க வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி இதற்கு உரிய பதிலை அளிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.