தமிழகம் மின் மிகை மாநிலமா? உண்மையை ஒப்புக் கொண்ட மின்துறை அமைச்சர்!

0
86

இலவச மின்சாரத்திற்காக நான்கரை இலட்சம் விவசாயிகள் காத்திருக்கிறார்கள் என்று சட்டசபையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்திருக்கின்றார். பொது நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இரண்டாவது நாளாக நேற்றைய தினம் நடந்தது. அந்த சமயத்தில் உரையாற்றிய அதிமுக உறுப்பினர் சம்பத்குமார் திமுக ஆட்சிக்கு வந்தாலே அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது என்று தெரிவித்தார்.

அவருடைய உரைக்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக அரசின் மின் நிறுவு திறன் 80 சதவீதத்திற்கு மேல் இருந்தது. அது படிப்படியாக குறைந்து 50 சதவீதத்திற்கு வந்து விட்டது பத்து வருடங்களுக்கு முன்னர் திமுக ஆட்சியில் இலவச மின்சார இணைப்பு இரண்டு லட்சத்து 4 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது என தெரிவித்து இருக்கின்றார்.

அதோடு கடந்த 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் 87 ஆயிரம் விவசாயிகள் மட்டுமே இலவச மின்சாரம் பெற்றார்கள் என்று தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் இலவச மின்சாரத்திற்காக 4.52 லட்சம் விவசாயிகள் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் மின் மிகை மாநிலம் என தெரிவித்து இருந்தீர்கள் இவர்களுக்கு மின் இணைப்பு வழங்கி இருக்கலாமே கடந்த ஒன்பது மாத காலமாக மின்சார பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. தற்சமயம் அந்த பணிகள் முடிக்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்தார் செந்தில் பாலாஜி.

இதனை அடுத்து உரையாற்றிய அதிமுகவின் உறுப்பினர் சம்பத்குமார் கடந்த ஆட்சி காலத்தில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக கொடுக்கப்பட்டது. அப்போது மின் கட்டணம் செலுத்தாதவர்கள் தற்சமயம் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி பயன்பாட்டிற்கு ஏற்றவாறு தான் மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழகம் மின் மிகை மாநிலம் என தெரிவிப்பது முற்றிலும் தவறானது என தெரிவித்தார்.