முகமது ஷமிக்கு பதிலாக இவரை அனுப்புங்கள்! சுனில் கவாஸ்கர் கருத்து

0
99
Sunil Gavaskar-News4 Tamil
Sunil Gavaskar-News4 Tamil

முகமது ஷமிக்கு பதிலாக இவரை அனுப்புங்கள்! சுனில் கவாஸ்கர் கருத்து

முகமது ஷமிக்கு பதில் இவரை இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புங்கள்-இவரை விட திறமையானவர் யாரும் இல்லை என சுனில் கவாஸ்கர் ஆலோசனை தெரிவித்துள்ளார்

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்து பிறகு தோல்வியில் இருந்து மீண்டு 20-20 தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.இந்தியாவின் இந்த வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் ஹர்திக் பாண்டியாவின் அதிரடியான பேட்டிங் கும் மற்றும் யார்க்கர் நாயகன் நடராஜன் அவர்களின் பிரமாதமான பவுலிங் தான் என்று கூறப்படுகிறது.

ஒரு நாள்‌ போட்டி மற்றும் 20-20 போட்டி முடிவடைந்ததால் அடுத்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்,முதல் போட்டியில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 244 ரன்கள் எடுத்தது.‌ பிறகு முதல் இன்னிங்சில் விளையாட ஆஸ்திரேலியா அணியால் 199 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.பிறகு இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தட்டு தடுமாறியது.இந்த நிலையில் வேகப்பந்து வீச்சாளர் ஷமி பேட்டிங் விளையாடும் போது அவருக்கு தோள்பட்டையில் பந்து பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவரால் விளையாட முடியவில்லை.அதனால் அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

பிறகு விளையாடிய ஆஸ்திரேலியா அணி 93 ரன் என்ற எளிய இலக்கை 2 விக்கெட் இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் சுலபமாக வெற்றி அடைந்தது.இதனால் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை வகிக்கிறது.அடுத்த டெஸ்ட் போட்டி வரும் 26 ஆம் தேதி மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.முதல் டெஸ்டில் இந்திய அணியின் சொதப்பல் ஆட்டத்தால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வீரர்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொடக்க ஆட்டக்காரர் பிரித்தீவ் ஷா முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸிலும் ஒற்றை இலக்க ரன்னோடு வெளியேறியதால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார்.இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இவர் விளையாடுவது சந்தேகம் தான் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

அதேபோல் முகமது ஷமிக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முஹமது சிராஜ் அல்லது நவ்தீப் சைனி ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் அல்லது இந்திய அணியில் நடராஜன் சேர்க்கப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் காயமடைந்த ஷமிக்கு பதிலாக இஷாந்த் சர்மாவை உடனடியாக ஆஸ்திரேலியா அனுப்ப வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளது‌ மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில் “முகமது ஷமி காயம் அடைந்திருப்பது இந்திய அணிக்கு மாபெரும் இழப்பு. இவர் பவுன்சர்கள் மற்றும் யார்க்கர்களை வீசி எதிரணி வீரர்களை நிலைகுலைய வைப்பார். இவர் இந்திய அணிக்காக விக்கெட்களை பெற்று தருபவர். தற்போது முகமது ஷமி இல்லாத இந்திய அணியில் இஷாந்த் சர்மா பங்கு பெற்றால் இந்திய அணிக்கு மாபெரும் நம்பிக்கையாக இருக்கும்.

இஷாந்த் சர்மாவின் உடல்நிலை குணமடைந்து இருந்தால் உடனடியாக அவரை ஆஸ்திரேலியா அனுப்ப வேண்டும். நம்மிடம் சரியான பேக்கப் வீரர்கள் இருக்கிறார்கள், இருப்பினும் ஆஸ்திரேலிய வீரர்களின் விக்கெட்களை எடுக்கும் அளவிற்கு அவர்களிடம் திறமை இருக்கிறதா என்பது சந்தேகமாக இருக்கிறது” என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் கேப்டன் விராட் கோஹ்லியின் மனைவிக்கு குழந்தை பிறக்க உள்ளதால் அவர் அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் எனவும், அவருக்கு பதிலாக துணை கேப்டன் ரகேனா இந்திய அணியை வழிநடத்துவார் எனவும் செய்திகள் வெளியாகின்றன.

author avatar
Parthipan K