செல்வமகள் சிறுசேமிப்பு திட்டத்தில் இணைந்திருக்கிறீர்களா? அப்படியென்றால் இது உங்களுக்கான தகவல்தான்!

0
78

அரசு சேமிப்பு திட்டமான செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு ஆரம்பித்து சேமிப்பவர்கள் கவனத்திற்கு இந்த திட்டத்தின் வட்டி விகிதம் தற்போது உயர வாய்ப்பிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

சுகன்யா சம்ரிதி யோஜனா என்பது பெண் குழந்தைகளுக்கான சிறுசேமிப்பு திட்டம். இந்த திட்டத்தில் வருடத்திற்கு 7.6 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இது மிகவும் பாதுகாப்பான முதலீடு மற்றும் சேமிப்பு திட்டமாகும்.

இந்த திட்டத்தை பெண் குழந்தைகளின் எதிர்கால சேமிப்பாகவும் வருமானம் ஈட்டும் முதலீடு அல்லது பெண் குழந்தைகளின் எதிர்கால தேவைகளுக்கு ஒரு முதலீடாகவும் நீங்கள் நினைத்துக் கொள்ளலாம்.

அண்மைக் காலமாக இந்த திட்டத்தில் பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் அதிகளவில் முதலீடு செய்வதை பார்க்க முடிகிறது.

அரசு சார்பில் இந்த திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது. தபால் நிலையம், பொதுத்துறை வங்கியின் மூலமாக இந்தத் திட்டத்தில் இணையலாம் என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், எதிர்வரும் ஜூலை மாதம் முதல் இந்த திட்டத்தில் வட்டி விகிதம் உயர வாய்ப்பிருப்பதாக தகவல்கள் இணையதளத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. இந்த திட்டத்தின் வட்டி விகிதங்கள் உயர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று நம்பிக்கை தரும் விதமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரிசர்வ் வங்கி வழங்கும் ரெப்போ வட்டி விகிதத்தை மீண்டும் 0.50 சதவீதம் உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவு செய்திருக்கிறது. பிறகு இந்த சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஜூன் மாதம் இறுதிக்குள் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

அண்மையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் ரெப்போ விகிதத்தை ஒரு மாதத்தில் 90 அடிப்படை புள்ளிகள் அதிகரித்திருக்கிறது.

இதன் காரணமாக, அரசின் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 0.50 முதல் 0.75 சதவீதம் வரையில் உயர்த்தப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

எதிர்வரும் ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் எதிர்கால வைப்பு நிதி செல்வமகள் சேமிப்பு உள்ளிட்ட அரசு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2020-21 முதல் காலாண்டில் இருந்து சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. 2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டில் காண பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் சென்ற ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் ஜூன் மாதம் 30ஆம் தேதி வரையில் நடைபெற்று முடிவடையும்.

நடப்பு நிதி 2வது காலாண்டில் இந்த சிறு சேமிப்பு திட்டங்களில் வட்டி விகிதங்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

அரசு அதிகாரபூர்வமாக இந்த அறிவிப்பை வெளியிடும் வரையில் வாடிக்கையாளர்கள் அனைவரும் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.