தேனியில் தேங்காய் பூ ரூ.100க்கு விற்பனை! இதன் மருத்துவ பயன் தெரியுமா?

0
218
Selling coconut flower in honey for Rs.100! Do you know its medical benefits?
Selling coconut flower in honey for Rs.100! Do you know its medical benefits?
தேனியில் தேங்காய் பூ ரூ.100க்கு விற்பனை! இதன் மருத்துவ பயன் தெரியுமா?

தேனி மாவட்டம் கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் தேங்காய்ப் பூ விற்பனை சாலையோரங்களில் அமோகமாக நடைபெற்று வருகிறது. தென்னங்குருத்து போன்று சுவையுடைய தேங்காய் பூவை சுவைக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
தேனி மாவட்டம் கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேங்காய்ப்பூ விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தேனி மாவட்டம் முழுவதும் இந்த தேங்காய் பூ விற்பனை நடைபெற்று வருகிறது.
தென்னை மரத்தில் இருந்து பறிக்கப்பட்ட தேங்காய், மீண்டும் மண்ணில் புதைக்கப்பட்டு 90 நாட்கள் மண்ணிலே வளர விடப்படுகின்றன. 90 நாட்களில் தேங்காய் முளைத்த பின்னர் தேங்காய்க்குள் தேங்காய்ப்பூ உருவாகிறது.
மண்ணில் புதைக்கப்பட்ட தேங்காய் 90 நாட்களுக்கு பின் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு விற்பனைக்காக பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 90 நாட்கள் மண்ணிலேயே இருந்த தேங்காயின் சத்துக்கள் அனைத்தையும் தேங்காய்ப்பூ உறிஞ்சி வைத்துக் கொள்கிறது.
தேங்காய் பூவானது சுவையில் தென்னங்குருத்து போன்றே உள்ளது. கல்லீரல் பிரச்னை, வாய் புண், குடல்புண், வாயு பிரச்சனை, உடல் சூடு , சிறுநீரக கல், சளி, நுரையீரல் சம்பந்தப்பட்ட மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் தேங்காய்ப்பூ எடுத்துக்கொண்டால் நன்மை பயக்கும் என்கின்றனர் வியாபாரிகள்.
இந்த தேங்காயானது நாட்டு சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிடும்பொழுது கூடுதல் சுவை தருகிறது. நாற்றைப் பிடுங்காமல் தேங்காயை 7 நாட்கள் வரை வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், நாற்றைப் பிடுங்கி வைத்தால் தேங்காய் ஒரு நாள் மட்டுமே நன்றாக இருக்கும் என்கின்றனர் வியாபாரிகள்.
இந்த தேங்காயிலிருந்து தேங்காய்ப்பூ மட்டுமே சாப்பிட உகந்தது. தேங்காய் சில முற்றிலும் சுவையற்று இருப்பதால் அதனை சாப்பிட முடியாத வகையில் உள்ளது. தேங்காய் பூ எடுத்த பின்னர் தேங்காய் ஓட்டில் உள்ள தேங்காய் சில்-ஐ தேங்காய் எண்ணெய் எடுப்பதற்கு பயன்படுத்துகின்றனர்.
பொள்ளாச்சியில் இருந்து தேனி மாவட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்டு கம்பம், கூடலூர், சின்னமனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாலையோரங்களில் தேங்காய்ப் பூ விற்பனை நடைபெற்று வருகிறது.ஒரு தேங்காய் 70 ரூபாய்க்கு பொள்ளாச்சியில் இருந்து கொள்முதல் செய்யும் வியாபாரிகள் ஒரு தேங்காய் 80 முதல் 100 வரை விற்பனை செய்து வருகின்றனர்.
தேங்காய் பூ வியாபாரம் மூலம் நாள் ஒன்றுக்கு சுமாராக ரூ.3000 வரை கிடைக்கிறது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது தமிழகத்தில் தேங்காய் விலை குறைந்துள்ள நிலையில், தேங்காய்களை மீண்டும் தேங்காய் பூவாக மாற்றி விற்பனை செய்துவருவது வணிக ரீதியாக பயன் தருவதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.