செல்ஃபியால் வந்த விபரீதம்! கிணற்றில் விழுந்த இளைஞர்!

0
104

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த இருக்கின்ற சின்ன மோட்டூர் கிராமத்தைச் சார்ந்த சஞ்சீவி என்ற 19 வயது இளைஞர் கேட்டரிங் படித்து வந்திருக்கிறார். நோய் தொற்று காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டதால் வீட்டில் இருந்த அவர் வீட்டின் அருகே இருக்கின்ற விவசாயத்திற்கு சென்று இருக்கிறார். அந்த சமயத்தில் ராஜேந்திரன் என்பவரின் விவசாய நிலையத்தில் டிராக்டரில் ஏர் உழுது கொண்டு இருந்ததாக சொல்லப்படுகிறது.

இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் சஞ்சீவ் அந்த சமயத்தில் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார். அந்த சமயத்தில் டிராக்டரின் ஓட்டுனர் உணவு அருந்த சென்ற சமயத்தில் தானும் டிராக்டரில் ஏறி புகைப்படம் எடுத்து கொண்டு ஸ்டேட்டஸ் வைத்திருக்கிறார் சஞ்சீவ்

அதோடு டிராக்டரில் சாவி இருந்ததன் காரணமாக, சாவியை ஆன் செய்து டிராக்டரை அவர் ஓட்டுவதற்கு முயற்சி செய்து இருக்கிறார். அந்த சமயத்தில் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் விவசாய நிலையத்தில் கண்டபடி ஓடியிருக்கிறது. அங்கே இருந்த 120 அடி ஆழமுள்ள கிணற்றில் டிராக்டர் பாய்ந்திருக்கிறது. டிராக்டர் உடன் சஞ்சீவ் அவர்களும் கிணற்றில் விழுந்து இருக்கிறார். சத்தம் கேட்டு அங்கே இருந்த விவசாயக் கூலித் தொழிலாளிகள் ஓடிவந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. கிணற்றில் டிராக்டர் உடன் இளைஞர் விழுந்ததை அறிந்து கொண்ட கிராம மக்கள் கூச்சலிட்டு இருக்கிறார்கள்.120 அடி ஆழம் இருக்கும் விவசாய கிணற்றில் 35 அடி ஆழத்தில் தண்ணீர் இருந்திருக்கிறது.

உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இறங்க முயற்சி செய்தார்கள்.அந்த சமயத்தில் அது முடியாமல் போகவே மின் மோட்டார்களை வைத்து கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றி இருக்கிறார்கள். பிறகு கயிறு கட்டி கிணற்றில் இறங்கிய தீயணைப்புத்துறை வீரர்கள் சுமார் 5 மணி நேரம் போராடி சஞ்சீவ் அவர்களை சடலமாக மீட்டு இருக்கிறார்கள்.

அதன்பிறகு சுமார் ஒரு மணி நேரம் கழித்து பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் கிணற்றில் இருந்த டிராக்டரை தீயணைப்பு துறையினர் மீட்டு இருக்கிறார்கள். டிராக்டர் உடன் கிணற்றில் விழுந்த இளைஞரை காண்பதற்காக இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட உடன் அருகில் இருந்த ஊரைச் சார்ந்தவர்கள் அங்கே குவியத் தொடங்கிவிட்டார்கள்.