அக்னிபத் வீரர்களுக்கு தேர்வு தொடக்கம்! இதோ முழு விவரங்கள்!

0
118
Selection begins for Agnipath players! Here are the full details!
Selection begins for Agnipath players! Here are the full details!

அக்னிபத் வீரர்களுக்கு தேர்வு தொடக்கம்! இதோ முழு விவரங்கள்!

2023ஆண்டு ஜூலையில் அக்னிபத் வீரர்களின் முதல் அணி தயாராகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு நான்கு ஆண்டுகள் பணியாற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என  மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 45  முதல் 50 ஆயிரம் வீரர்களை பணியில் அமர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வாகும் வீரர்களுக்கு 6 மாத காலம் பயிற்சி அளிக்கப்படும் பிறகு மூன்றரை ஆண்டுகள் அவர்கள் வேலை செய்யலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளதுஇந்தத் திட்டத்தின் கீழ் அக்னிபத் வீரர்கள் விமானப்படையில் சேர்வதற்கு  ஜூன் 19 ஆம் தேதி  முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது.  விண்ணப்பத்தின் மூலம் தேர்வாகும் அக்னிபத் வீரர்கள் நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் தான் பணியாற்ற வேண்டும் என்றும் அவர்களின் 6 மாத பயிற்சி அளிக்கப்படும் என்றும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

விமானப்படை.யில் சேர்வதற்கு  ஆன்லைன் மூலமாக http://Agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தின் வழியாக  விண்ணபங்கள் வரவேற்கப்பட்டது. இதனையடுத்து இந்திய விமானப் படையில் சேர்வதற்கு 57000 பேர் விண்ணப்பித்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விமானப்படையில் சேர்வதற்கான தேர்வு ஜூலை 29ஆம் தேதியிலிருந்து நடைபெறும் எனவும் மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

author avatar
Parthipan K