முன்னாள் அமைச்சரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் நகைகள் பறிமுதல்! எவ்வளவு தெரியுமா?

0
75

முன்னாள் அமைச்சரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் நகைகள் பறிமுதல்! எவ்வளவு தெரியுமா?

முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புதுறை சோதனை நடத்தி வருகிறது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, கே.சி. வீரமணி, எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் சி விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளிலும் அடுத்தடுத்து சோதனை நடத்தப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அந்த சோதனைகளில் கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

அந்த வகையில், கடந்த ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.அன்பழகன். இவர் தன் வருமானத்திற்கு அதிகமாக 11.32 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவருடைய வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த சொத்துக்குவிப்பு தொடர்பான வழக்கில் கே.பி.அன்பழகனின் மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் மருமகள் உள்ளிட்ட ஐந்து பேர் மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கே.பி.அன்பழகன் 2016 முதல் 2021 வரை உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்ததை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் கே.பி.அன்பழகனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான, நெருக்கமான 57 இடங்களில் சோதனை நடத்தினர்.

அந்த வகையில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது உறவினர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 2 கோடியே 87 லட்சத்து 98 ஆயிரத்து 650 ரூபாய் ரொக்கப்பணமும், 6.637 கிலோ தங்க நகைகள், 13.85 கிலோ வெள்ளி மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் அவற்றில் .கைப்பற்றப்பட்டுள்ளன 2 கோடியே 65 லட்சத்து 31 ஆயிரத்து 650 ரூபாய் ரொக்கப்பணம் கணக்கில் வராதது என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

author avatar
Parthipan K