இது ஒன்றும் பெங்களூரு மைதானம் இல்லை… தினேஷ் கார்த்திக்கை விமர்சித்த சேவாக்!

0
89

இது ஒன்றும் பெங்களூரு மைதானம் இல்லை… தினேஷ் கார்த்திக்கை விமர்சித்த சேவாக்!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் இந்த உலகக்கோப்பை தொடரில் சொதப்பி வருகிறார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் பின்வரிசை வீரரும் தினேஷ் கார்த்திக் உலகக்கோப்பை தொடரில் எதிர்பார்த்தபடி விளையாடவில்லை. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் இலக்கை துரத்தும் போது அவுட்டானார். அதே போல நேற்றைய தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும் 15 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

இதனால் அவர் மேல் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுபற்றி பேசியுள்ள முன்னாள் வீரர் சேவாக் “முதல் நாளிலிருந்தே இப்படித்தான் (பண்ட் அணியில் இருந்திருக்க வேண்டும்) இருந்திருக்க வேண்டும். பண்ட் அங்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்துள்ளார். தினேஷ் கார்த்திக் கடைசியாக ஆஸ்திரேலியாவில் எப்போது விளையாடினார்? இது பெங்களூரு விக்கெட் அல்ல. ஹூடாவுக்கு பதிலாக பண்ட் அணியில் இருந்திருக்க வேண்டும் என்று இன்றும் சொன்னேன், பண்ட் இங்கு விளையாடிய அனுபவம் உள்ளவர். அவரது கபா இன்னிங்ஸ் ஒரு ஜாம்பவான் இன்னிங்ஸ்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் பீல்டிங்கின் போது அவர் முதுகுவலி காரணமாக பாதியிலேயே மைதானத்தில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக கடைசி சில ஓவர்கள் ரிஷப் பண்ட் மாற்று விக்கெட் கீப்பராக செயல்பட்டார். பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடாத முதுகுவலியாலும் அவதிப்படும் தினேஷ் கார்த்திக் அடுத்து பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. எப்படி ஆகினும் ரிஷப் பண்ட்டை அணியில் எடுக்க வேண்டும் என்ற கருத்து அதிகரித்து வருகிறது.