நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று சொல்வீர்களா ?ஏக்கத்தோடும்..எதிர்பார்ப்போடும் ..சீமான் ட்வீட் !

0
55

இந்தியாவின் அனைத்து மாநில அரசுத்துறைகளிலும் பணியாற்றும் யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான 3 நாட்கள் இணையவழி பயிற்சியை கடந்த 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை மத்திய ஆயுஷ் அமைச்சகம் நடத்தியது.

இந்த இணையவழி பயிற்சி வகுப்பில் தமிழ்நாட்டை சேர்ந்த 37 மருத்துவர்கள் உள்ளிட்ட சுமார் 400 மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.பயிற்சியின் ஆரம்ப நாளிலிருந்தே பயிற்சியாளர்கள் இந்தி மொழியில் மட்டுமே வகுப்புகளை நடத்தி வந்துள்ளனர் இதனையடுத்து தமிழகத்தை சார்ந்த மருத்துவர்கள் தங்களுக்கு இந்தி மொழி புரியவில்லை என்பதால் ஆங்கிலத்தில் நடத்தும் படி கூறியுள்ளார்கள் ஆனால் மத்திய ஆயுஸ் அமைச்சகம் இதற்கு எந்தவொரு பதிலையும் அளிக்கவில்லை.

இந்நிலையில் கடைசி நாளான 20 ஆம் தேதி பயிற்சி வகுப்பில் மத்திய ஆயுஸ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கோட்சேவும் இந்தியில் பேசியுள்ளார் அப்போது தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் தங்களுக்கு இந்தி மொழி புரியவில்லை ஆங்கிலத்தில் பேசும் படி மீண்டும் கூறியுள்ளனர்.
அதற்கு ராஜேஷ் கோட்சே தமக்கு சரளமாக ஆங்கில பேச வராது என்றும்,அதனால் இந்தியில் மட்டும் தான் வகுப்பு நடத்த முடியும் என்றும் கூறியுள்ளார்.மேலும் இந்தி புரியாதவர்கள் வகுப்புகளை விட்டு வெளியேறலாம் என்று கூறியுள்ளார்.இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது இதற்கு மு.க.ஸ்டாலின், மரு.ராமதாஸ்,விஜயகாந்த், கனிமொழி,வைகோ,ஜி.கே.வாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

இந்திலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில் யார்
பிரிவினைவாதி?
இந்தி தெரியாதவர்கள் எல்லாம் வெளியேறுங்கள் என்று சொல்வது போல இந்தி தெரியாத மாநிலங்கள் எல்லாம் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று சொல்வீர்களா?
ஏக்கத்தோடும்…
எதிர்பார்ப்போடும்… என்று பதிவிட்டுள்ளார்.

author avatar
Parthipan K