எழுப்பிய சுவருக்கு பதிலாக வீட்டையே கட்டியிருக்கலாம்! ஆலோசனை கொடுத்த சீமான்!!

0
109

எழுப்பிய சுவருக்கு பதிலாக வீட்டையே கட்டியிருக்கலாம்! ஆலோசனை கொடுத்த சீமான்!!

வருகிற 24 ஆம் தேதி இந்தியாவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகை தர இருப்பதால் இந்தியாவின் பல இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி ஆக்ரா மற்றும் குஜராத் சபர்மதி ஆசிரமம் போன்ற பகுதிகளை டிரம்ப் பார்வையிட இருக்கிறார்.

அதிபர் டிரம்ப்பை பிரம்மாண்டமாக வரவேற்க 1 லட்சத்திற்கும் அதிகமானோரை குஜராத் அரசு ஏற்பாடு செய்துள்ளது. பல கிலோமீட்டர் தூரத்திற்கு வரிசையாக நின்று வரவேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், குஜராத் பகுதியில் குடிசைகளாக உள்ள இடங்களை மறைக்கும் விதமாக 7 அடி உயரம் காம்பவுண்ட் சுவர் எழுப்பியுள்ளனர்.

சுவர் எழுப்பிய சம்பவம் ஊடகங்களில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து சர்ச்சையாகி வருகிறது. குறிப்பாக எதிர்கட்சிகள் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளன. டிசிட்டல் இந்தியாவில் இப்படித்தான் சுவர் எழுப்பி மறைப்பதா என்று சமூக வலைதளங்களிலும் விமர்சனம் தொடர்ந்து வருகிறது. குடிசைகளை மறைக்க அவசர அவசரமாக சுவர் எழுப்புவது நாட்டில் உள்ள ஏழ்மை நிலையை மறைப்பதற்குத்தான் என்று சீமான் பேசியுள்ளார். மேலும் இந்த சுவர்களை கட்டும் செங்கற்களை வைத்து அந்த ஏழைகளுக்கான வீடுகளையே கட்டித்தரலாம் என்று ஆலோசனை தரும் வகையில் நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

author avatar
Jayachandiran