அவருடைய சமூக பொறுப்பு அவ்வளவு தான்! இயக்குனர் ஷங்கரை விமர்சித்த சீமான்

0
83

அவருடைய சமூக பொறுப்பு அவ்வளவு தான்! இயக்குனர் ஷங்கரை விமர்சித்த சீமான்

நடிகர் சூர்யா புதிய கல்விக் கொள்கை குறித்து அளித்த கருத்து மற்றும் அதனால் உருவான சர்ச்சை குறித்து அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த விவகாரத்தில் இயக்குனர் ஷங்கரை இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க : சூர்யாவின் வீட்டுக்கு 100 கோடி பணம் எப்படி வந்தது? பாஜக நிர்வாகி கேள்வி

தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத்திற்காக நடக்கும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.இந்த தேர்தலுக்கான முடிவுகள் நேற்று மாலையே அறிவிக்கப்பட்டன. இதில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி 1,386 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். 

இயக்குனர் சங்க தலைவர், 2 துணைத் தலைவர்கள், 4 இணைச் செயலாளர்கள், மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே தற்போது தேர்தல் நடைபெற்றுள்ளது. செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு போட்டியின்றி ஆர்.வி.உதயகுமார் மற்றும் பேரரசு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

நேற்று நடைபெற்று முடிந்த இந்த இயக்குனர் சங்க தேர்தலில் இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், ஷங்கர், செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா போன்ற பல்வேறு இயக்குநர்கள் வாக்களித்தனர். பின்பு ஒவ்வொருவரும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேட்டியும் அளித்தனர்.

அந்த வகையில் இயக்குநர் ஷங்கர் வாக்களித்து விட்டுப் பேட்டியளிக்கும் போது ‘புதிய கல்விக் கொள்கைக்கு சூர்யா எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறித்து உங்கள் கருத்து’ என்ன என்று பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். அதற்கு ஷங்கர், “எனக்குத் தெரியாது. அதை நான் பார்க்கவில்லை” என்று பதிலளித்தார். ஷங்கரின் இந்தப் பதில் அங்கிருந்த இயக்குனர்கள், பத்திரிக்கையாளர்கள் என பலருக்கும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது.

இதனையடுத்து இயக்குனர் ஷங்கர் சென்ற பிறகு இயக்குநர் சீமான் வாக்களித்துவிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது இயக்குநர் சங்கத் தேர்தல், பாரதிராஜா போட்டியிடாதது குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார். உடனே சூர்யா குறித்த கேள்விக்கு ஷங்கர் அளித்த பதில் தொடர்பாக சீமானிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு சீமான், “அவருடைய சமூகப் பொறுப்பு அவ்வளவு தான். பாரதிராஜா மீதிருக்கும் பாசம் அவர் ஒரு சிறந்த இயக்குநர் என்பதற்காக மட்டுமல்ல. அவருக்கு 78 வயதாகிறது. இன்றைக்கும் ஒரு சமூகப் பிரச்சினை என்றால் ஓடி வந்து போராட்டக் களத்தில் நிற்பது, போராடுவதால் மட்டுமே அவர் மீது மக்களுக்கு ஒரு ஈர்ப்பு இருக்கிறது.

கஜா புயலில் தஞ்சாவூரின் பாதிப் பகுதிகள் அழிந்துவிட்டன. அவர்கள் படம் பார்க்க கொடுத்த பணத்தில் தான் உயர்நிலை இயக்குநர்கள் 30 கோடி, 40 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறீர்கள். அவர்களுக்கு ஏன் ஒரு சிறுதொகை கூட கொடுக்கவில்லை. இவர்களது சமூகப் பொறுப்பு எல்லாம் அவ்வளவு தான். இங்கு ‘மது குடிப்பது உடல்நிலைக்கு கேடு. புகைப் பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும்’ என்று போட்டுவிட்டால் சமூகப் பொறுப்பு முடிந்துவிட்டது என நினைக்கிறார்கள். 

காலத்தைப் பதிவு செய்பவன் தான் படைப்பாளி. சமகாலத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருப்பது எப்படி எனத் தெரியவில்லை. படங்களில் மட்டும் சமூகக் கருத்துகள், புரட்சிகரமான கருத்துகள் சொல்வது எல்லாம் ஏமாற்று வேலை” என்று கடுமையாகச் சாடினார் சீமான்.

மேலும் படிக்க : பாஜக தலைவர்களின் பேச்சுக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகர் சூர்யா!

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

author avatar
Parthipan K