குவாட்டர் கட்டிங்  கேட்டு அட்டூழியம் செய்யும் விசிக ஒன்றிய செயலாளர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு!

0
89
Secretary of the Vizika Union who is abusing the OC goods! Video recording goes viral!
Secretary of the Vizika Union who is abusing the OC goods! Video recording goes viral!

குவாட்டர் கட்டிங்  கேட்டு அட்டூழியம் செய்யும் விசிக ஒன்றிய செயலாளர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது நடந்து முடிந்த 2021 ஆம் சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்தது. அவ்வாறு கூட்டணி அமைத்ததில் ஆறு இடங்களில் போட்டியிட்டது. அதில் நான்கு தொகுதிகளில் வெற்றியை கண்டது. 2019 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து இரண்டு இடங்களில் போட்டியிட்டது. ஆனால் நம்முறை ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றியை கண்டது. ஆனால் இம்முறை அதற்கு மாறாக நான்கிடங்களில் வெற்றியை கண்டது. அவரு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றதன் மோதல் அவர்களின் ஆட்டத்தை தொடங்க ஆரம்பித்து விட்டனர். திமுக வெற்றியை தொடர்ந்து முதன் முதலில் அம்மா உணவகத்தையே அவர்களது உறுப்பினர்கள் தாக்கினர்.

மேலும் அம்மா உணவகத்தை எடுக்கும்படியும் கூறி வந்தனர். இவ்வாறு பல ரவுடிசம் இவர்களது ஆட்சியில் நடந்து வரும் வேலையில் தற்பொழுது விடுதலை சிறுத்தை கட்சியினரும் அவர்களைப் போல செயல்பட ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில் தென்காசி மாவட்டத்தின் விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய செயலாளராக இருப்பவர்தான் அன்பழகன். அன்பழகன் அவர் குடியிருக்கும் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகள் சென்று பணமின்றி மதுபாற்றல்கள் வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி அங்கு உள்ளவர்களிடம் கட்சியின் வளர்ச்சிக்காக பணம் வசூல் செய்வதாக தொடர்ந்து வற்புறுத்தி பணத்தை வாங்கியுள்ளார்.

ஒவ்வொரு முறையும் இவர் செல்ல முடியாத நேரத்தில் இவரது நிர்வாகியை அனுப்பி பணம் மற்றும் மதுபாட்டல்களை பெற்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஆனால் இம்முறை அவரது நிர்வாகி சென்ற போது டாஸ்மாக் கடை ஊழியர் தர மறுத்துள்ளார். தனது நிர்வாக இடம் மது பாட்டில் மற்றும் பணம் தரும் மறுத்ததால் செயலாளர் அன்பழகன் கோபம் முற்று உள்ளார். பின்பு அந்த டாஸ்மாக் கடைக்கு சென்று அங்கு பணி புரிந்தவர்களை மிரட்டி உள்ளார். அவர் அந்த கடையில் செய்த அட்டூழியத்தை அங்கு உள்ளவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அது தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.