விரைவில் ரகசிய திருமணமா? நயன்தாரா-விக்னேஷ் சிவன்!

0
71

சினிமா துறையே அதிரும் அளவுக்கு தனக்கான ரசிகர்களை கொண்டிருப்பவர் “லேடி சூப்பர் ஸ்டார்” நயன்தாரா, தற்சமயம் நயன்தாரா நானும் ரவுடிதான் படத்தின் மூலமாக விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டுள்ளது பலரும் அறிந்ததே!

இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக நயனும் விக்னேஸஷ்சிவனும் “லிவிங் டுகெதர்” என்ற பெயரில் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.இந்த ஐந்து ஆண்டுகளில் பலமுறை காதல் சுற்றுலா செல்வதாக உலகையே சுற்றி வருகின்றனர் இந்த காதலர்கள்.

மேலும் நயன்தாராவுடன் படப்பிடிப்புகளுக்கு இவரும் சேர்ந்து சென்று பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இடையே எரிச்சலையும் ஏற்படுத்திக் கொண்டார். இருப்பினும் நயன்தாராவின் காதலன் என்பதால் மற்றவர்களால் இவரை எவ்வித குறையும் கூற இயலவில்லை. இது மட்டும் இல்லாமல் இருவரும் சேர்ந்து பல புகைப்படங்கள் எடுத்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இணையதளத்தையே கலக்கி வருகிறார்கள் எனவும் கூறலாம்.

இதனிடையே பல முறை சமூக வலைத்தளங்களில் சிலர் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என தகவல்களை வெளியிட்டனர் ஆனால் இன்றளவும் அவை உண்மையா? இல்லையா? என தெரியவில்லை.

இவ்வகையான செய்திகள் ஒருபுறமிருக்க விக்னேஷ் ஒரு பதிவில் நாங்கள் இருவரும் திருமணம் செய்யாமல் பல ஆண்டுகள் காதலர்களாக வாழ்வோம் என்ற செய்தியை வெளியிட்டார். இருப்பினும் தற்போது தனது காதல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக வருகிற பிப்ரவரி மாதம் நயன்தாரா-வை ரகசிய திருமணம் செய்யப் போவதாக தகவல்கள் ரகசியமாகவே வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இன்னும் இவை குறித்த நேரடி தகவல் இருவரிடமிருந்தும் பெறப்பட வில்லை என்பதே உண்மை.எது எப்படியோ விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் திருமணம் ஆகுமா? ஆகாதா?என்பதை காலம்தான் காத்திருந்து பதில் சொல்ல வேண்டும். அதுவரை காதல் பறவைகளாக உலகில் மட்டுமல்ல இணையதளத்திலும் பறந்து கொண்டுதான் இருக்கப் போகிறார்கள்.

author avatar
Parthipan K

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here