இரண்டாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

0
141
Booster Dose Vaccine
Booster Dose Vaccine

இரண்டாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தற்போது உள்ள சூழ்நிலையில் இந்தியாவில் கொரோனாவிற்கு இரண்டாவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டுமா? என்பதை பற்றி மத்திய அரசு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

சீனா தென்கொரியா ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இந்நிலையில் சீனா மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து இந்தியா வருவதற்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 134 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 2582 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா சிகிச்சைக்கான முன்னேற்பாடுகளை மத்திய அரசு ஏற்கனவே கலந்தாலோசித்து நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்தியாவில் இதுவரை 220.11 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.  95.13கோடி இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் 22.41 கோடி பூஸ்டர் டோஸ் ஊசியும் போடப்பட்டுள்ளன. இதனையடுத்து பெருகிவரும் கோவிட் பரவலை கருத்தில் கொண்டு இரண்டாவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுமா என்னும் கேள்வி எழுந்தது.

இதனை அடுத்து மத்திய அரசு வட்டாரங்களில் நிலவி வந்த கருத்துக்கள் அடிப்படையில் இந்தியாவில் தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் இரண்டாவது பூஸ்டர் டோஸ் தேவையில்லை.  முதலில் முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதை நிறைவு செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.