விருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!! பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்!

0
99
Scorpio – Today's Horoscope!! You have a busy day!
Scorpio – Today's Horoscope!! You have a busy day!

விருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!! பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்!

விருச்சிக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். இன்றைக்கு ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனதில் குழப்பம் மற்றும் படபடப்புடன் காணப்படுவீர்கள்.

குடும்ப உறவு குழப்பத்துடன் இருந்தாலும் பெரிதளவுக்கு பாதிப்பு வராது. கணவன் மனைவி இடையே சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக வீண் அழைச்சல் வந்து சேரும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் அமைதி காப்பது நல்லது. கலைத் துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு பின் அலைச்சல்கள் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் ஒரு மந்தமான போக்கு தென்படும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் எடுக்கும் முயற்சிகளை சற்று ஒத்தி போடுவது நல்லது. வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் அமைதி காப்பது மிகவும் அவசியம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ சீரடி சாய்பாபாவை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு நன்மை தரும் நாளாக அமையும்.

author avatar
CineDesk