பள்ளிகள் இனி அரை நாள் தான் செயல்படும்! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட உத்தரவு!

0
292
Schools will only function for half a day! The order issued by the Department of Education!
Schools will only function for half a day! The order issued by the Department of Education!

பள்ளிகள் இனி அரை நாள் தான் செயல்படும்! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட உத்தரவு!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்து மண்டல பள்ளி கல்வி இணை இயக்குனர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு மாநில பள்ளி இயக்குனர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அறிவிப்பில் மார்ச் 15ஆம் தேதி முதல் 2022 23 கல்வி ஆண்டின் கடைசி வேலை நாளான 24 ஆம் தேதி பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்படும். அனைத்து நிர்வாகிகளின் கீழ் உள்ள தொடக்க மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் நிர்வாகம் காலை 8 மணி முதல் மதியம் 12:30 மணி வரை மட்டுமே செயல்படும்.

12:30 மணிக்கு மதிய உணவு வழங்கப்படும். பத்தாம் வகுப்பு மாணவர்கள் எஸ்எஸ்சி பொதுத்தேர்வுக்கு ஏப்ரல் 2023 க்கு தயார்படுத்துவதற்காக சிறப்பு வகுப்புகள் ஆனது தொடரும் எஸ்எஸ்சி தேர்வு மையங்கள் கொண்ட பள்ளிகள் மதியம் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் மேற்கண்ட உத்தரவுகளை அனைத்து நிர்வாகிகளின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு தெரிவித்து செயல்படுவதை கண்காணிக்குமாறும் அதன் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தால் தான் இந்த நேரம் மாற்றம் ஏற்பட்டுள்ளது என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

author avatar
Parthipan K