ஜனவரி 4 முதல் பள்ளிகள் திறப்பு:! பள்ளி கல்வித்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு!

0
59

ஜனவரி 4 முதல் பள்ளிகள் திறப்பு:! பள்ளி கல்வித்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு!

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் அனைத்து கல்வி நிறுவனங்களும் முடக்கப்பட்ட நிலையில்,அனைத்து பொது தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்றும் அறிவிக்கப்பட்டது.ஆனால் நடப்பாண்டிற்கான வகுப்புகள் பள்ளிகளில் நடத்தப்பட முடியாத சூழல் ஏற்பட்டதன் காரணமாக,மாணவர்களின் கல்விதிறனை கருத்தில் கொண்டு,ஆன்லைன் வாயிலாகவும் தொலைக்காட்சி வாயிலாகவும் வகுப்புகள் நடைபெற்று வந்தன.

கடந்த அக்டோபர் மாதம் மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப,பெற்றோர்களின் கையொப்பத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில்,புதுச்சேரியில் அக்டோபர் 8ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சந்தேகம் தீர்க்கும் வகுப்புகள் நடைபெற்று வந்தன.அதாவது வாரத்தில் முதல் மூன்று நாட்களுக்கு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சந்தேகம் தீர்க்கும் வகுப்புகளும்,அடுத்த 3 நாட்களுக்கு 9 மற்றும் 11 ஆம் வகுப்பிற்கான சந்தேகம் தீர்க்கும் வகுப்புகளும் நடைபெற்று வந்தன.

இந்நிலையில்,அனைத்து வகுப்புகளுக்கும் ஜனவரி 4ஆம் தேதி முதல்,பள்ளிகள் திறக்க புதுச்சேரி அரசு அனுமதி அளித்துள்ளது.பள்ளிகள் செயல்படும் நேரம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையென்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.எனினும்
விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிகளுக்கு வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Pavithra