சில கட்டுப்பாடுகளுடன் பள்ளிகளை திறக்க அனுமதி

0
61

கொரோனா நோய்த்தொற்று கடந்த மார்ச் மாதம் இலங்கை தாக்கத் தொடங்கியது.ஏப்ரல் மாதத்திலேயே நோய்த்தொற்று அதிகமாகி புதிதாக யாரும் வைரஸ் பாதிப்பு ஏற்படாத வகையில் முடிந்தது.தற்பொழுது கொரோனாவால் யாரும் புதிதாக பாதிக்குப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இலங்கையில் கொரோனா நோய் தொற்றால் மொத்தம் 2,844 பேருக்கு கொரோனா வைரஸ்  பரவி 2,579 பேர் குணமடைந்தனர். 11 பேர் பலியாகிவிட்டனர்.மீதமுள்ளோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
தற்பொழுது இலங்கையில் நோய்த்தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் தொழிற்சாலைகள், பணியிடங்கள் ,நிறுவனங்கள் ஆகியவற்றை திறக்க அறிவுறுத்தினர்.அதில் ஒரு கட்டமாக கல்வியின் பயில பள்ளிகளை திறக்ககவும் முடிவு செய்து,சில கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதியளித்துள்ளனர்.

இதன் முதல்கட்டமாக கடந்த ஜூலை மாதம் சில வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளுக்கு திறக்கப்பட்டன.ஆனால் கொரோனா வைரஸ் மீண்டும் தொடங்கியதால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன. இதனையடுத்து நாளுக்கு நாள் நோயை கட்டுப்படுத்தும் முறையில் அந்நாட்டு அரசு முடிவு எடுத்து தற்பொழுது நோய் முற்றிலும் கட்டுக்குள் வந்தது.இதனால் மீண்டும் பள்ளிகளை திறக்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது. மேலும் மாணவர்களின் வருகைக்கும் சில கட்டுப்பாடுகள் விதித்து பள்ளிகளை திறக்க அனுமதி அளித்தது.

பள்ளியில் 200 மாணவர்களுக்கும் குறைவாகவே பள்ளியில் இருக்க வேண்டும் என்றும் ஒரு மாணவர்களுக்கு இடையே ஒரு மீட்டர் இடைவெளி கடைபிடித்து வகுப்பறைகள் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதிகமாக மாணவர்கள் இருக்கும் பட்சத்தில் எந்தெந்த நாட்களில் என்னென்ன பாடம் எடுக்க வேண்டும் என்று முன்னரே அறிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

கல்வி இடங்களில் சமூக இடைவெளியும் மற்றும் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டுமென இலங்கை சுகாதாரத் துறையினர் என்.ஹெச்.எம் .சித்ரானத்தா அறிவுறுத்தியுள்ளனர்.பள்ளிகளில் உள்ள சிற்றுண்டியை திறக்க அனுமதி இல்லை என்றும் கூறியுள்ளனர்.


கொரோனா நோய்த்தொற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் முழுமையான நோயை விரட்டும் வரை அலட்சியம் காட்டாமல் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

author avatar
Parthipan K