பள்ளி கல்லூரிகள் திறக்க முடிவு – இங்கிலாந்து அரசின் அறிவிப்பு!

0
83

பள்ளி கல்லூரிகள் திறக்க முடிவு – இங்கிலாந்து அரசின் அறிவிப்பு!

கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி கொண்டு வருகிறது. அதிலும் புதிதாக உருமாறிய கொரோனாவிற்கு இங்கிலாந்தில் வசிப்போர் அதிக அளவில்  பாதிக்கப்பட்டனர். இதனால் பிற நாடுகளை ஒப்பிடும் போது இங்கிலாந்து இயல்பு நிலைக்கு திரும்ப சிரமத்திற்கு உள்ளாகியது.

இங்கிலாந்தில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஊரடங்கை தொடர்ந்து   இப்பொழுது நாலாவது ஊரடங்கு அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ளது. இதில் இயல்பு நிலைக்கு  திரும்புவதற்காகவும், மேலும் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க திட்டமிட்டுள்ளனர். 

திட்டமிட்டதை அடுத்து மார்ச் 8ஆம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்று உறுதியான தகவலை அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் தெரிவித்துள்ளார். மாணவர்கள் அனைத்துவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.

கண்டிப்பாக முகக்கவசம் அணிவது, அடிக்கடி கைகளைக் கழுவுதல், முக்கியமாக கூட்டமாக சேறுவதற்கு அனுமதி இல்லை. இரு நபர்களுக்கு மேல் ஒரு இடத்தில் இருக்கக்கூடாது என்று அறிவித்துள்ளார். மேலும் மாணவர்கள் விளையாடுவதற்காக விளையாட்டு மைதானங்கள் 28ஆம் தேதி திறக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

author avatar
Parthipan K