கனமழையால் இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..!

0
113

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பொழிந்து வருகிறது. பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. தமிழகத்திற்கொ கொடுக்கப்பட்ட ரெட் அலார்ட் திரும்ப பெறப்பட்டாலும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் கேரள பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் குறிப்பாக டெல்டா மாவட்டமான தஞ்சை, திருவாரூர் , நாகை, மயிலாடுதுறை உள்ளிட்டவற்றில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் பல இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதோடு பயிர்களும் தண்ணீரில் அழுகி சேதமடைந்தன.

இதற்கிடையில் , கனமழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா வெளியிட்ட செய்தி குறிப்பில், கனமழை காரணமாக மயிலாடுதுறை பள்ளி, கல்லூரிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது.

இந்நிலையில் மழை நீரை பம்ப்செட் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி இன்று (14-11-2022) ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்படுள்ளது.

கனமழையால் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர். அதே போல கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாலுக்கா பகுதிகளில் (மாங்காடு உட்பட) இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.