பள்ளி ஆசிரிகர்கள் ,மாணவர்கள் தமிழில் கையெழுத்து எழுத வேண்டும் ! தமிழக அரசு உத்தரவு !

0
135
School teachers and students should write signatures in Tamil! Tamilnadu government order!
School teachers and students should write signatures in Tamil! Tamilnadu government order!

பள்ளி ஆசிரிகர்கள் ,மாணவர்கள் இனி தமிழில் கையெழுத்திட வேண்டும் ! தமிழக அரசு உத்தரவு !

மாணவர்கள் உட்பட அனைவரும் தமிழில் கையெழுத்திடும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களின் கையெழுத்தை தமிழில் எழுத வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

மேலும் பள்ளி மாணவர்கள் இனிஷியலை தமிழில் தான் எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் சேர அளிக்கும் விண்ணப்பம், வருகை பதிவேடு, பள்ளி, கல்லுாரிகளில் படிப்பை முடித்து பெறும் சான்றிதழ்கள் வரை, அனைத்திலும் தமிழ் முன் எழுத்துடன் வழங்கும் நடைமுறையை செயல்படுத்த வேண்டும்.

அதைதொடர்ந்து மாணவர்கள்  வருகைப்பதிவேடு உள்ளிட்டவற்றில் அவர்களின் பெயரை எழுதும் போது முன்னெழுத்தையும் தமிழிலேயே பதிவு செய்திட வேண்டும் எனத் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து பதிவுகளிலும்  பெயர்களை தமிழில் பராமரிக்கவும் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .இதற்கான விழிப்புனர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை,பள்ளி கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு ஆணையை சுட்டிக்காட்டி கல்வி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார் .

author avatar
CineDesk