பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! நவ.02 முதல் பள்ளிகள் திறப்பு… முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

0
100

1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு வரும் நவ. 02ம் முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. அடுத்த கல்வி ஆண்டு (2020 – 21) தொடங்கிய நிலையில் பல பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுத்து வருகின்றன. மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வந்தது. அதன்படி செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. எனினும் இது குறித்த இறுதி முடிவை அந்தந்த மாநில அரசு எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட தொடங்கியுள்ளது. இந்நிலையில், ஆந்திராவில் பள்ளிகள் திறப்பது குறித்து மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் அம்மாவட்ட முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் இறுதியில் வரும் நவ. 02 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு வரும் நவ. 02ம் முதல் பள்ளிகள் திறக்கப்படும். 1, 3, 5 மற்றும 7 ஆம் வகுப்புகளுக்கு ஒரு நாளும், 2, 4, 6 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு மற்றொரு நாளும் என 2 நாட்களுக்கு ஒருமுறை பள்ளிகள் திறக்கப்படும். ஒருவேளை மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பின், 3 நாட்களுக்கு ஒருமுறை வகுப்புகள் திறக்கப்படும். அதுவும் பள்ளிகள் மதியம் வரை மட்டுமே செயல்படும். மதிய உணவிற்கு பிறகு, மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K