இந்த வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!! மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!!

0
131

இந்த வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!! மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது. மேலும், அதன் காரணமாக பல உயிர்கள் இறந்தன. இதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் முதல் கோவில்கள் வரை அனைத்தும் மூடப்பட்டன.

கொரோனா காரணமாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. அத்துடன் சிறிது நாட்களுக்கு முன் தான் அவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது. மதிப்பெண் சான்றிதழ் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அரசு தெரிவித்து உள்ளது.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்து வரும் காரணத்தால் ஹரியானா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தமிழகத்தைப் பொருத்தவரை 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தயார்படுத்துவற்கு ஏதுவாக தமிழக பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் எப்பொழுது பள்ளிகள் திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்த நிலையில், சென்னையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, அவர் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் இருப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றும், இதனைக் குறித்து பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி இறுதியாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பார் என்றும் கூறியுள்ளார்.

இதனை அடுத்து கொரோனா வழிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்படும் மற்றும் ஆசிரியர்கள் தகுதி தேர்வு குறித்து நிலையான அறிவிப்பு விரைவில் வரும் என்று அவர் தெரிவித்தார்.

author avatar
Jayachithra