தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு!! அமைச்சர் வெளியிட்ட அதிரடி தகவல்!!

0
67

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் தொற்று இருந்த காரணத்தால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. பின், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளின் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டன.

சமீபத்தில், கொரோனா இரண்டாவது அலை காரணமாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு மதிப்பெண் பட்டியலும் வழங்கப்பட்டது. மேலும், மதிப்பெண் சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தெரிவித்து இருந்தது.

தற்போது, அடுத்த கல்வியாண்டு தொடங்கியுள்ளது. இந்த நிலையில், சில மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, தமிழகத்தில் பள்ளிகள் திறக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார். தமிழகத்தில் பொது தேர்வை எதிர்கொள்ளும் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கலாமா? என்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கிறார்.

மேலும் பள்ளிகள் திறப்பு தாமதமாவதால் பாடத்திட்டத்தை குறைப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம் என்று கூறியிருக்கின்றார். இந்த வருடம் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளை நோக்கி வந்த மாணவர்களை தக்க வைக்க பல நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Jayachithra