அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை குட் நியூஸ்! மிகுந்த மகிழ்ச்சியில் மாணவச் செல்வங்கள்!

0
66

கல்லூரி மாணவர்களுக்கு எப்படியோ ஆனால் பள்ளி மாணவ, மாணவிகளை பொருத்தவரையில் மழைக்காலம் வந்து விட்டாலே கொண்டாட்டம்தான்.

ஏனென்றால் மழையின் காரணமாக, அவ்வப்போது விடப்படும் விடுமுறைக்காக பள்ளி மாணவ, மாணவிகள் தவமாய் தவமிருந்து கொண்டிருப்பார்கள். எப்பொழுது மழை பெய்யும், எப்பொழுது பள்ளி விடுமுறை விடுவார்கள், என்று அனைத்து மாணவர்களும் எதிர்ப்பார்த்து காத்திருப்பார்கள்.

இன்னும் சொல்லப்போனால் தொலைக்காட்சிகளில் வரும் சிறுவர்களுக்கான படத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த மாணவர்கள் இந்த மழைக்காலம் வந்துவிட்டால் மட்டும் எப்பொழுதும் செய்தி தொலைக்காட்சிகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் சம்பவம் நடைபெறும்.

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் தற்சமயம் வடகிழக்கு பருவமழை காலம் நடந்துவருகிறது. மழை சென்ற மாதம் தமிழகம் முழுவதும் தீவிரம் அடைந்தது. இந்த மாதம் சற்று குறைந்து இருக்கிறது. ஆனாலும் அவ்வப்போது மழை பெய்து வருவதும் மழையால் பள்ளி மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு உடல் நிலை பாதிக்கப்படுகிறது. அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது, இதனால் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பல நாட்கள் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல இயலாத சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.

ஆகவே இதனை கருத்தில் வைத்து தமிழக பள்ளிக்கல்வித்துறை தற்சமயம் அரசு பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட் மற்றும் பூட்ஸ் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கு முடிவு செய்திருக்கிறது என செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

அதிலும் குறிப்பாக அதிக மழை பெய்யும் மலைப் பிரதேசங்களில் மாணவ, மாணவிகளுக்கு, பாதிப்பு அதிகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனை தவிர்ப்பதற்கு பள்ளிக்கல்வித் துறை சார்பாக மாணவ, மாணவிகளுக்கு ரைன்கோட் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தமிழக பள்ளிக்கல்வித் துறை இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்யும் பட்சத்தில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இடையே நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.