ஆசிரியர்களுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

0
62

ஆசிரியர்களுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

கொரோனா பரவல் அச்சத்தின் காரணமாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் தொற்று சற்று குறைந்ததன் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் சில கட்டுப்பாடுகளுடன் 9, 10, 11 மற்றும் 12 ம் வகுப்புகளும் மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தன.

அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் தேதியிலிருந்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் சில கட்டுப்பாடுகளுடன் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் நாட்டில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றின் பாதிப்பு வேகமாக அதிகரிக்க தொடங்கியது.

இந்த சூழ்நிலையில் தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி தொற்று பரவலை கருத்தில் கொண்டு இந்த மாதம் இறுதி வரை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தாலும், இந்த விடுமுறை நாட்களில் ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வந்து அவர்கள் பணியை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வருகிற சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாகவும் எனவே அன்றைய தினம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி இந்த மாதம் 31ம் தேதி வரை மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாணவர்கள் இன்றி பள்ளிகள் செயல்படுவதால் வருகிற சனிக்கிழமை அன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K