Connect with us

Breaking News

குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் திட்டம் நடைமுறை! அரசு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

Published

on

Scheme to give Rs 1000 to the head of the family is implemented! Super update released by the government!

குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் திட்டம் நடைமுறை! அரசு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் பல்வேறு வகையான வாக்குறுதிகளை கொடுத்தனர்.அந்த வகையில் திமுக அரசானது மகளிருக்கு கட்டணமில்லா பயண சீட்டு வழங்கப்படும் ,குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது.

Advertisement

எதிர் பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது.அதனை தொடர்ந்து மகளிருக்கு கட்டணமில்லா பயண சீட்டு வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தது.ஆனால் குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.புதுச்சேரியில் மாநிலத்தில் 21 வயதுக்கு மேல் 55 வயதுக்குள் இருக்கும் அரசின் எந்த ஒரு மாதாந்திர உதவித்தொகையும் பெறாத வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்ப தலைவிகளுக்கும் மாதந்தோறும் தலா ரூ 1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆளுநர் தமிழிசை கூறுகையில் புதுச்சேரி அரசு அறிவிக்காததை செயல்படுத்துகிறது.சில அரசுகள் அறிவித்தும் செயல்படுத்தவில்லை என தமிழ்நாடு அரசை மறைமுகமாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரியில் வழங்கப்பட்டதால் தமிழகத்திலும் விரைவில் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement