SBI வங்கி வாடிக்கையாளர்களா நீங்கள்? இவையெல்லாம் 40 நிமிடத்திற்கு இயங்காது!

0
99

SBI வங்கி இந்தியாவின் மிகப்பெரும் பொதுத்துறை வங்கி. அந்த sbi வங்கியானது இன்று NetBanking, யூபிஐ, மொபைல் ஆப் சேவைகள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு செயல்படாது என்று அறிவித்து உள்ளது.

 

Sbi வங்கி தனது சாப்ட்வேர்களில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்தி அப்டேட் செய்வதால் 40 நிமிடங்களுக்கு NetBanking, யூபிஐ, மொபைல் ஆப் சேவைகள் செயல்படாது என தெரிவித்துள்ளது.

 

வாடிக்கையாளர்கள் தங்களது சேவைகளை மிகவும் எளிதாக பெரும் வகையில் மொபைல் ஆப், UPI, Netbanking போன்ற நிறைய வழிமுறைகள் உள்ளது. இந்த சேவைகள் மூலம் ஒரே நேரத்தில் இந்த ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வழியாக பல பேர் சேவைகளை மேற்கொள்ள முயற்சிப்பதால் வங்கியின் பொது அலுவலகங்களில் பல சிக்கல்கள் வருவதால் தொழில்நுட்பத்தை மேம்படுத்த இன்று ஜூன் 20 ஆம் தேதி, SBI வங்கியின் netbanking, UPI, மொபைல் ஆப் சேவைகள் உள்ளிட்டவை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் எஸ்பிஐ வெளியிட்ட குறிப்பில், ஜூன் 20 ஆம் தேதி இரவு 1 மணி முதல் 1.40 வரை இந்த தொழில்நுட்ப வேலைகள் நடைபெறுவதால் பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இருக்காது என்று தெரிவித்துள்ளது.

 

அதனால் தங்களுக்கு ஏதாவது ஒரு பணம் பரிமாற்றம் போன்ற தேவைகளுக்கு முன்னதாகவே முன்னெச்சரிக்கையுடன் வாடிக்கையாளர் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இரவு ஒன்று 40 மணிக்கு மேல் வழக்கம் போல அனைத்து இன்டர்நெட் சேவைகள், ஆப், யோனோ அப், இன்டர்நெட் பாங்கிங், ஆகியவை செயல்படும் என தெரிவித்துள்ளது.

author avatar
Kowsalya