ஆண்களுக்கு போட்டியாக ரியல் எஸ்டேட் பிசினஸில் குதித்த பெண்கள்! காரணம் இதோ!

0
89

பெண்கள் தங்கத்தை வாங்குவதிலும், ஆண்கள் நிலத்தை வாங்குவதிலும், ஆர்வம் காட்டுவது வழக்கமாகிவிட்டது. ஆனால் சமீபகாலமாக பெண்கள் தங்கத்தை விட நிலம் வாங்குவதில் தான் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளார்கள்.

இன்றைய பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றவாறு மக்களும் தங்களுடைய தேவைகளை பல முதலீட்டு திட்டத்தின் மூலமாக நிறைவேற்றிக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். ஏனென்றால் நோய்த்தொற்று காலகட்டத்தில் திடீரென்று வருமானமில்லாமல் தவித்த நிலையில், பலருக்கு அவர்கள் ஏற்கனவே பல முதலீடுகளில் பணத்தை சேமித்து வைத்தது தான் உதவியாக இருந்தது.

இந்த சூழ்நிலையில்தான் நோய் தொற்று தாக்கத்திற்கு பின்னர் பாதுகாப்பான முதலீடு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் பொதுமக்களிடையே முன்பை விடவும், தற்போது அதிகமாக காணப்படுகிறது.

பொதுவாக பெண்கள் தங்கத்தில் முதலீடு செய்வதிலும், ஆண்கள் அசையா சொத்துக்களில் முதலீடு செய்வதிலும், ஆர்வம் காட்டுவார்கள். ஆனாலும் இந்த சூழ்நிலை தற்போது மாறியிருக்கிறது. பெண்களுக்கு படிப்படியாக நிலம் வாங்குவதில் தங்களுடைய ஆர்வம் அதிகரித்திருக்கிறது.

பெண்கள் என்றாலே தங்கத்தின் மீதான மோகம் அதிகமிருக்கும் இந்த நிலையில், தற்போது ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய பெண்கள் ஆர்வம் காட்டுவதற்கான காரணம் என்ன? என நாமும் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

இன்றைய பொருளாதார சூழ்நிலையில், தங்கம் ஒரு நல்ல முதலீட்டு தேர்வாகவும், உடனடி நிதி இலக்குகளை அடைய உதவும் குறுகிய கால முதலீடாகவும், கருதப்படுகிறது.

இருந்தாலும் ரியல் எஸ்டேட் என்பது நிலையான முதலீடாகவும், இருந்து வருகிறது. தற்போது ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சியடைந்து வருவதால் பங்குச்சந்தையை விட ரியல் எஸ்டேட் மிகச் சிறந்த வருமானத்தை கொடுக்கின்றது.

ஆகவே எந்த ஒரு சூழ்நிலையிலும், தங்கத்தை விட ரயில்வே ஸ்டேட் துறையில் முதலீடு செய்வது எப்போதும் சிறந்த வழியாக இருக்கும். நிலம், வீடு, உள்ளிட்ட ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யும்போது வரிச்சலுகைகள் நமக்கு கிடைக்கப் பெறுகின்றன.

ரியல் எஸ்டேட் துறையில் பெண் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் விதத்தில் வங்கிகள் பல முயற்சிகளையும், சலுகைகளையும், வழங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக பல பொதுத்துறை வங்கிகள் ஆண்களைவிட பெண்களுக்கு வீட்டுக் கடன்களுக்கு குறைந்த வட்டி விகிதங்களில் கடன்களை வழங்கி வருகிறது. அதோடு பெண்கள் பெயரில் எந்த வகையான சொத்துக்களுக்கும் முத்திரை வரிவிலக்கு வழங்கி அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பொருளாதார ரீதியாக வளர்ச்சியை அதிகரிக்கும் பணமதிப்பு மற்றும் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கம் உள்ளிட்டவை இந்திய பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்குகிறது.

அதே சமயம் வீடு, நிலம், உள்ளிட்டவற்றை வாங்குவது போன்ற ரியல் எஸ்டேட்டில் முன்னெடுக்கப்படும் முதலீடு பொருளாதாரத்தின் வளர்ச்சியை எளிதாக அதிகமாக்க உதவுவதாக இருக்கிறது. அதோடு தங்கம் மூலதன பொருள் மற்றும் எரிபொருள் போன்ற பொருட்களின் விலை உயருவதற்கு வழிவகை செய்கிறது.

இதுபோன்ற பல்வேறு நன்மைகள் உள்ளதால் ஆண்களுக்கு போட்டியாக தற்போது பெண்களும் வீடு, நிலம், வீட்டுமனை தோட்டம், உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அதே நேரம் தங்களிடமிருக்கின்ற பணத்தை வைத்து நகை சீட்டுகள் போட்டு தங்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வருகிறார்கள். பெண்கள் என்னதான் கணவர்கள் அல்லது பெற்றோர்கள் கடைசிவரையில் உடனிருந்தாலும் தங்களுக்கென ஒரு முதலீடு தேவை என்பதில் கவனமாக இருக்கிறார்கள்.