உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்களா? அப்படியென்றால் இந்த சேமிப்பை நிச்சயமாக தொடங்குங்கள்!

0
126

ஒரு பெற்றோராக அவங்களுடைய வாரிசுகளின் எதிர்காலத்திற்கு எதையாவது சேமித்து வைக்க வேண்டும் என்று நீங்கள் கனவு கண்டு கொண்டு இருக்கலாம்.

அதற்கு பல முதலீட்டு விருப்பங்கள் இருக்கின்றன. உங்களுடைய பிள்ளைகளின் எதிர்கால முதலீடு, கல்வி, திருமணம், உள்ளிட்ட தேவைகளுக்காக சேமிப்பு அவசியமாகிறது.

பெற்றோர் குழந்தைகளின் தேவைக்காக பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகும் போது அவர்களுடைய எதிர்காலத்தில் பாதுகாப்பதற்காக பெற்றோர் எந்தெந்த வகையான திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்று தற்போது பார்க்கலாம்.

சுகன்யா சம்ரித்தி யோஜனா

இந்த சுகன்யா சம்ரித்தி யோஜனா என்பது பெண் குழந்தைகளின் தேவைகளுக்காக பிரத்தியேகமாக நிதியை ஒதுக்கும் முதலீட்டுத் திட்டமாகும். சுகன்யா சம்ரித்தி யோஜனா 21 வருட கால அளவை கொண்டதாகும்.

இதனை 10 வயதுள்ள பெண் குழந்தைகளின் பெயரில் மட்டுமே ஆரம்பிக்க முடியும் 21 ஆண்டு கால அவகாசத்தில் 5 வருடங்களுக்கு பிறகு இடையில் ஏதாவது மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே இந்தத் திட்டத்தை முன்கூட்டியே முடித்துக் கொள்ள முடியும்.

அதோடு அந்த குழந்தைக்கு 18 வயது நிறைவடையும் போது அந்த குழந்தையின் உயர்கல்விக்காக முந்தைய வருட கணக்கு இருப்பிலிருந்து அதிகபட்சமாக 50 சதவீதத்தை திரும்பப் பெறலாம்.

அதோடு ஒரு பெண்ணுக்கு 18 வயது நிறைவடைந்த பின்னர் அவருடைய திருமணத்தின் காரணத்திற்காக, எப்போது வேண்டுமானாலும் கணக்கை நிறைவு செய்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த முதலீடு பிரிவு 80சியின் கீழ் வரிச்சலுகையை தகுதி பெறுகிறது அதோடு பெறப்படும் வட்டிக்கு வரி விலக்கு வழங்கப்படுகிறது.

பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு

இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு என்பது 15 வருட திட்டமாகும். இது 15 ஆண்டுகளுக்கு வழக்கமான பங்களிப்புக்களை செலுத்த வேண்டும். ஒருவர் 5 வருடங்களுக்குப் பிறகு இதிலிருந்து வெளியேறலாம்.

அல்லது 4ம் வருடத்திலிருந்து முதலீட்டுத் தொகையிலிருந்து கடன் பெறலாம். அதோடு 7ம் ஆண்டுக்குப் பின்னர் முதலீட்டுத் தொகையிலிருந்து சிறிதளவு நிதியை திரும்ப பெறலாம் என சொல்லப்படுகிறது.

இந்த முதலீட்டில் ஒருவருக்கு ஒரு கணக்கு மட்டுமே திறக்க முடியும். வேண்டுமானால் மற்றொரு கணக்கு மைனர் குழந்தையின் பெயரில் திறக்கலாம். குறைந்தபட்சம் 500 மற்றும் அதிகபட்சம் 1.5 லட்சம் சுய மற்றும் சிறு கணக்கு டெபாசிட் செய்யலாம்.

இதில் செய்யப்படும் முதலீடு பிரிவு 80சியின் கீழ் வரும் வரிச்சலுகையைப்பெற தகுதி பெறுகின்றது. அத்துடன் பெறப்படும் வட்டிக்கு வரி விலக்கும் வழங்கப்படுகிறது.

ஈக்விட்டி மியூச்சுவல் பண்டுகள்

படிப்பு தொழில் உள்ளிட்ட எதிர்காலத் தேவைக்காக 7 வருடங்கள் அவகாசமிருக்கின்ற குழந்தைகளின் பெற்றோர் இந்த திட்டத்தின் மூலமாக முதலீடு செய்யலாம்.

லார்ஜ் கேப் மற்றும் மிட் கேப் ஃபண்டுகளில் தொடர்ந்து செயல்படும் திட்டங்களுடன் ஒரு முக்கிய போர்ட்போலியோவை ஏற்படுத்தி சுமார் 3 ஆண்டுகள் வரையில் தொடர்ந்து முதலீடு செய்வது நற்பலன்களை தரும் என்று சொல்லப்படுகிறது.

பிரிமியம் தள்ளுபடியுடன் கூடிய ஆயுள் காப்பீட்டு திட்டங்கள்.

குழந்தைகளின் எதிர்காலத் தேவைக்காக முதலீடு செய்ய பிரீமியம் தள்ளுபடியுடன் கூடிய ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் ஏற்றவை ஆயுள் காப்பீட்டு பாலிசியில் பிரீமியம் தள்ளுபடி என்பது பாலிசிதாரர் இறந்துவிட்டாலோ அல்லது தவிர்க்க முடியாத காரணங்களால் தவணையை கட்ட முடியாமல் போனாலும், பாலிசி முடிவுக்கு வருவதை தவிர்க்க உதவிபுரிகிறது.

இந்தத் திட்டம் மூலமாக இன்சூரன்ஸ் நிறுவனம் உறுதியளிக்கப்பட்ட தொகையை செலுத்துவதுடன் உரிய தேதியில் திட்டத்தில் பிரிமியத்துடன் சேர்த்துவைக்க வழிவகை செய்கிறது.