சனி பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

0
93

சனி பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

 

27.12.2020 முதல் 19.12.2023 வரை மனம் போல் வாழ விரும்பும் மகர ராசி நேயர்களே. சனியின் நாமம் : ஜென்ம சனி சனி பார்வையிடும் இடங்கள்3ம் பார்வை7ம் பார்வை 10ம் பார்வைசகோதர ஸ்தானம்களத்திர ஸ்தானம்தொழில் ஸ்தானம்

உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் இப்பொழுது உங்கள் ராசிக்கு ஜென்மச் சனியில் இருக்கிறார்.

சனி தான் இருக்கும் வீட்டில் இருந்து மூன்றாம் பார்வையாக சகோதர ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தையும் பார்க்கின்றார். புதுவிதமான அனுபவங்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். உடல்நலத்தில் கவனம் செலுத்தவும். வெளிநாட்டு பயணங்கள் சிறப்பாக அமையும். சிறு குறு தொழில் செய்பவர்கள் தங்களது தொழிலில் சற்று பொறுமை காப்பது அவசியம்.

இளைய உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் அனுசரித்து செல்லவும். வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியுடன் செயல்படவும். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். மனதிற்கு விரும்பிய வாகனங்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். மேலும் புதிய முயற்சிகளில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.

சனி பெயர்ச்சி பெண்களுக்கு : கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடனிருப்பவர்களின் உண்மையான முகத்தை தற்போது காண்பீர்கள். திருமண யோகம் அமையும். இளைய சகோதரர்களிடையே சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது நன்று. பணம் கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் பலவிதமான இடர்பாடுகளில் இருந்து காப்பாற்றும்.

சனி பெயர்ச்சி மாணவர்களுக்கு :விளையாட்டுத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு தங்களது கவனத்தையும், பாதுகாப்பையும் அதிகப்படுத்தவும். படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற தங்களது படிக்கும் நேரத்தை அதிகப்படுத்தி படிக்க வேண்டும். பெற்றோர்கள்களின் அரவணைப்பு உங்களின் முன்னேற்றத்திற்கு பக்கபலமாக இருக்கும்.

வழிபாடு முறை :சனிக்கிழமைதோறும் சனீஸ்வரர்க்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வரவும்.

 

 

author avatar
Parthipan K

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here