பிணவறையில் தந்தை மகள் மருத்துவமனைக்கு வெளியே குவிந்த உறவினர்கள்! என்ன நடந்தது ராஜீவ் காந்தி மருத்துவமனையில்?

0
76

சுவாதி கொலை வழக்கை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது மக்கள் கூட்டம் நிரம்பி இருந்த ரயில் நிலையத்தில் காலை 7 மணி அளவில் அவர் படுகொலை செய்யப்பட்டார்.

அந்த கொலை நடைபெற்று சில வருடங்கள் சென்றிருந்தாலும் இந்த கொலை வழக்கின் சுவடுகளை இன்னும் அழியாத நிலையில் தான் சென்னையில் ஆதம்பாக்கம் ராஜா தெரு காவலர் குடியிருப்பு பகுதியைச் சார்ந்த சத்யா என்ற இளம் பெண்ணும் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

நேற்று பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்யா என்ற பெண் அவரை ஒருதலையாக காதல் செய்து வந்த சதீஷ் என்ற இளைஞரால் கொலை செய்யப்பட்டார்.

சத்தியா தனியார் கல்லூரியில் படித்து வந்த நிலையில், அவரை சதீஷ் என்ற இளைஞர் ஒரு தலையாக காதல் செய்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் ஒரே காவலர் குடியிருப்பில் தான் வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது. சத்யாவின் தந்தை மாணிக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். சதீஷின் தந்தை காவல்துறை துணை ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

காவலர் குடியிருப்பு பகுதியில் சத்யாவை பார்த்த சதீஷ் பல வருடங்களாக அவரை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சத்யா எங்கு சென்றாலும் அங்கெல்லாம் சென்று சதீஷ் அவரை அடிக்கடி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. காவலர் குடியிருப்பில் அடிக்கடி சத்யாவை பார்த்து அவரின் காதலை சொல்லி இருக்கிறார் சதீஷ்.

கல்லூரிக்கு தனியாக செல்லும் வழியிலும் அதேபோல திரும்பி வரும் வழியிலும் காதலை தொடர்ந்து சொல்லி அவருக்கு தொந்தரவு கொடுத்திருக்கிறார் சதீஷ். இந்த ஒரு தலை காதல் காரணமாக மது போதை மருந்து உள்ளிட்ட போதை பழக்கத்திற்கு சதீஷ் அடிமையாகியிருக்கிறார். சதீஷ் படிப்பில் பெரிய அளவில் ஆர்வம் இல்லாமல் ஒரு தாதாவை போல் சுற்றி வந்ததாக சொல்லப்படுகிறது.

இப்படி சென்று கொண்டிருந்த நிலையில் தான் சத்தியா தன்னுடைய காதலை ஏற்றுக் கொள்ளாத கோபத்தினால் நேற்று சதீஷ் சத்யாவை கொலை செய்திருக்கிறார். பரங்கிமலை ரயில் நிலையத்தில் தொடர்வண்டிக்காக சத்யா காத்திருந்த போது அவரை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்துவிட்டார் சதீஷ் இதில் உடல் இரண்டாகி சத்யா சம்பவ இடத்திலேயே பலியானார் என்று சொல்லப்படுகிறது.

சம்பவ இடத்திலேயே சத்யா பலியானதை தொடர்ந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்த சதீஷை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். காவல்துறை தரப்பின் சதீஷை தேடுவதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை காவல்துறையினர் சதீஷ் சென்ற இடங்கள் அவருடைய கூட்டாளி வீடுகள் மற்றும் அவருடைய செல்போன் சிக்னல் 1 லிட்டர் தொடர்ந்து கண்காணித்ததாக தெரிகிறது இந்த தொடர் தேடுதல் வேட்டைக்கு பிறகு நேற்று இரவு சதீஷ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இது ஒரு பக்கம் இருக்க மறுபுறம் சத்யாவின் தந்தை இன்று அதிகாலை திடீரென மரணம் அடைந்தார் அவருக்கு ஏற்கனவே ஒரு முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது இதனால் இன்று காலை அவர் அதிர்ச்சியில் மாரடைப்பு காரணமாக, பலியானதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அதன் பிறகு நடைபெற்ற விசாரணையில் வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில் மாணிக்கத்திற்கு மாரடைப்பு ஏற்படவில்லை அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரிய வந்தது.

இந்த சூழ்நிலையில்தான் தற்போது இருவரின் உடலும் ஒன்றாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி மருத்துவமனையின் பிணவறையில் இருவரின் உடலும் அருகருகே வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வெளியே மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாக தெரிகிறது. அதோடு மருத்துவமனைக்கு வெளியே சத்யாவின் உறவினர்கள் குவிந்துள்ளனர்.

ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வெளியே குவிந்த சத்யாவின் உறவினர்கள் சத்யா, சத்யா என்று கதறி அழுது கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

சத்யா மிகவும் சுட்டித்தனமான பின் அனைவரிடமும் அன்பாக பேசுபவர். ஜாலியாக இருக்கும் குணம் படைத்தவர். பெரிதாக எதை பற்றியும் கவலைப்பட மாட்டார். அவருக்கு போய் இப்படி நடந்து விட்டதே என்று அவருடைய குடும்பத்தினர் கதறி அழுதபடி ஊடகங்களில் பேட்டி வழங்கியுள்ளார்கள்.

ஒரே நாளில் ஒரு குடும்பமே போச்சுங்க நாங்க யாரும் எதிர்பார்க்கவே இல்லை மாணிக்கத்திற்கு மாரடைப்பு ஏற்பட்டது என்று தான் நினைத்தோம் ஆனால் விஷம் குடித்து அவர் இறந்துட்டார் விஷ பாட்டில் கூட எங்கு இருக்குன்னு தெரியல ரொம்ப கஷ்டமா இருக்கு என்று மாணிக்கத்திற்கு நெருக்கமான அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்கள்.

ஒரு தலை காதலால் ஒரு கொலை அதனை தொடர்ந்து ஒரு தற்கொலை என்று அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் சத்யாவின் ஒட்டுமொத்த குடும்பமே நொறுங்கி போய் உள்ளது.