அதிமுகவை கைபற்ற சசிகலா கையில் எடுத்த புது அஸ்திரம்!

0
79

மறைந்த முன்னாள் அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று தீர்மானமாக இருந்து வந்தார். அதற்கான பல திட்டங்களையும் அவர் செயல்படுத்தினார்.

அதாவது ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பன்னீர்செல்வத்தை பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி அவர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தார். இதனால் அப்போது அதிமுகவின் முதலமைச்சர் பொறுப்பு காலியாக ஆனது. அதன் பின்னர் அந்த பொறுப்பிற்கு தான் வந்து விடலாம் என்று திட்டம் போட்டார் சசிகலா. ஆனால் அதற்குள் பன்னீர்செல்வம் தர்மயுத்தம் மேற்கொள்ளவே அவருக்கான வாய்ப்பு தள்ளிப்போனது அதனால் அப்போது அனைத்து சட்டசபை உறுப்பினர்களையும் காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைத்தார் சசிகலா. அவர் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொள்ள நினைத்த சமயத்தில் சொத்து குவிப்பு வழக்கில் அவர் சிறை செல்ல நேர்ந்தது இதனால் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதல் அமைச்சராக நியமனம் செய்துவிட்டு சிறைக்கு சென்றார் சசிகலா.

ஆனால் பதவிக்கு வந்து சிறிது நாட்களிலேயே சசிகலாவுக்கு எதிராக மாறிப்போனார் எடப்பாடி பழனிச்சாமி. இதனால் சசிகலா கடும் அதிர்ச்சிக்கு ஆளானார் அதோடு அவருடைய அக்காள் மகன் டிடிவி தினகரன் அவர்கள் எடப்பாடி பழனிச்சாமி மீது கடுமையான கோபத்திற்கு ஆளானார்.

ஆனால் தண்டனை காலம் முடிவடைந்து கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி விடுதலை ஆன சசிகலா ஜனவரி மாதம் 8ஆம் தேதி சென்னை வந்தடைந்தார். அவர் சென்னைக்கு வந்தவுடன் தீவிர அரசியலில் இறங்குவார் என்று அவருடைய ஆதரவாளர்கள் முதற்கொண்டு அதிமுகவினர் வரை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் சசிகலா அனைவரும் ஆச்சரியப்படத்தக்க ஒரு முடிவை மேற்கொண்டார்.

அதாவது தான் இனிமேல் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று ஒரு நாள் இரவு அறிக்கை விட்டார் அந்த அறிக்கை தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இதனை வரவேற்பதாக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முதல் அப்போதைய துணை முதல்வர் ஓபிஎஸ் வரையில் அனைவரும் தெரிவித்தார்கள். ஆனால் நாட்கள் செல்ல, செல்ல, தமிழகத்தில் சசிகலாவிற்கான ஆதரவு அதிகமாக இருப்பதாக காட்டுவதற்காக பல வேலைகளைச் செய்யத் தொடங்கினார் சசிகலா. அதாவது அதிமுக தொண்டர்கள், முன்னாள் நிர்வாகிகள், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் இடம் தொலைபேசி மூலமாக உரையாடி அந்த ஆடியோவை வெளியிட தொடங்கினார் சசிகலா. மேலும் சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அதிமுகவை தன்வசம் கொண்டு வந்துவிட வேண்டும் என்று சசிகலா மிகத் தீவிரமாக முயற்சி செய்யத் தொடங்கினார். இதற்கு எதிராக அதிமுக தலைவர்கள் பலர் கண்டனங்களைத் தெரிவிக்க தொடங்கினார்கள்.

இதற்கிடையே சசிகலா ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்டோரை யாரும் தரக்குறைவாக பேச வேண்டாம் அனைவரும் ஒன்றிணைந்து அதிமுக ஆட்சிக்கு வர பாடுபட வேண்டும் என கூறியிருக்கிறார்.

அதாவது அதிமுகவின் பொன்விழாவை முன்னிட்டு நேற்றைய தினம் சென்னை ராமாபுரத்தில் இருக்கின்ற எம்ஜிஆர் வாழ்ந்த இல்லத்தில் அதிமுகவின் பொன்விழா மலரை வெளியிட்ட சசிகலா தொண்டர்களிடையே உரையாற்றியிருக்கிறார். அந்த சமயத்தில் பேசிய அவர் பாணியில் மிகப்பெரிய மாற்றம் தென்பட்டது. சில மாதங்களுக்கு முன்னர் தொலைபேசியில் தொண்டர்களுடன் உரையாற்றிய சசிகலா தான் அரசியலுக்கு வருகிறேன், கட்சியை பார்த்துக்கொள்கிறேன் என்றெல்லாம் உரையாற்றியிருந்தார்.

ஆனால் அவர் நேற்றைய தினம் ராமாவரம் தோட்டத்தில் உரையாற்றும்போது ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் உடன் சமாதானம் பேசும் மனநிலையில் இருப்பதை தான் அவர் உணர்த்தி இருக்கிறார் என தெரிவிக்கிறார்கள்.

ராமநாதபுரத்தில் அப்போது உரையாற்றிய சசிகலா தலைவர் வழி வந்த அம்மாவின் உண்மையான தொண்டர்கள் நாம் அனைவரும் மற்றவர்களை புண்படுத்த வேண்டாம் என தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக இனி யாரும் பொதுக்கூட்டங்களில் உரையாற்றும் சமயத்தில் கூட மற்றவர்களை தரக்குறைவாக உரையாற்ற வேண்டாம் என தெரிவித்திருக்கிறார்.

அதோடு கண் போன போக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா? மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா? புரட்சித்தலைவர் உடைய இந்த பாடல் யாருக்கு பொருந்தும் என்பதை உங்களிடமே விட்டு விடுகிறேன் என தெரிவித்ததோடு, என்று நம்முடைய இயக்கம் ஆட்சியில் இருந்திருந்தால் புரட்சித் தலைவருக்கு ஜெயலலிதா அம்மாவுக்கும் எவ்வளவு பெருமையாக இருந்திருக்கும் என அவர்களிடையே கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மேலும் அவர் பேசியதாவது, நெருக்கடி என்னை சூழ்ந்து கொண்டிருந்த சமயத்தில் கூட கழகத்தை ஆட்சியில் அமர வைத்துவிட்டு தான் நான் சென்றிருக்கிறேன். சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தொகுதிகளில் நான் ஒதுங்கியிருந்தது எதற்காக என உங்களுக்கே நன்றாக தெரியும். என்னால் புரட்சித் தலைவரால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கத்திற்கு எள்ளளவும் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தான் நான் அமைதியாக இருந்தேன். கழகத்தைக் காப்பாற்ற வேண்டியது நம்முடைய கடமை இந்த சமயத்தில் நமக்கு தேவை ஒற்றுமை தான். நீரடித்து நீர் விலகாது நமக்குள் இருக்கின்ற பிளவுகள் தான் நம்முடைய எதிரிகளுக்கு இடம் கொடுக்கும் அஸ்திரம் ஆகும் என தெரிவித்திருக்கிறார்.

இந்த கழகம் தோற்றுவிக்கப்பட்ட இந்த ஐம்பது வருடங்களில் தமிழ்நாட்டில் 33 வருடங்கள் இந்த கழகம் ஆட்சியில் இருந்தது. இந்த இயக்கம் இரும்புக் கோட்டையாக மாறி உள்ளது என்றால் இருபெரும் தலைவர்கள் தான் அதற்கு காரணம். பொது மக்கள் நலனிலும், தொண்டர்களின் நலனிலும், அக்கறை காட்டி இருக்காவிட்டால் நாம் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் தூக்கி எறியப்பட்டு இருப்போம் என்பதை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும். நாம் ஒன்றிணைந்து நிற்க வேண்டிய நேரம் இது தான் என்று தெரிவித்திருக்கிறார்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் மறைவிற்கு பின்னர் கட்சி பிளவுபட்டது இதே ராமாவரம் தோட்டத்தில் ஜானகி அம்மையார் என்னை கூப்பிட்டு அவர்களுடன் நான் உரையாற்றி நல்ல முடிவு அதன்பின்னர் உண்டானது. அவர்களே கட்சி ஒன்றாக இணைய வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அது நடைபெற்றது இந்த இல்லத்தில் தான் என தெரிவித்திருக்கிறார் ஜெயலலிதாவின் பெரு முயற்சியின் காரணமாக, கழகம் ஒன்றுபட்டு மறுபடியும் கழகத்தின் கீழ் ஆட்சி அமைந்தது. அதேபோல புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா உள்ளிட்டோரின் வழியில் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பொது மக்களின் பேராதரவுடன் கழக ஆட்சியை மறுபடியும் தமிழ் நாட்டில் ஏற்படுத்த வேண்டும். அதற்காக நாம் எல்லோரும் பாடுபட வேண்டும் என தெரிவித்திருக்கிறார் அதோடு நாம் ஒன்றாக இணையவேண்டும் கழகம் வென்றாக வேண்டும் என்று தெரிவித்த சசிகலா, தன்னுடைய பேச்சு முடியும்போது ஜெயலலிதா பாணியில் அண்ணா நாமம் வாழ்க புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் நாமம் வாழ்க புரட்சித் தலைவி நாமம் வாழ்க என தெரிவித்து தன்னுடைய உரையை முடித்துக்கொண்டார்.

ஆனால் சசிகலாவிற்கு நெருக்கமான வட்டாரங்களில் ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்டோரின் பின்புறத்தில் பாஜக இருக்கிறது அதோடு நீதிமன்றத்தில் உரிமை வழக்குகள் முடிவுக்கு வருவதற்கு நீண்ட நாட்கள் தேவைப்படும். எனவே சட்டப்படி நடத்தும் போராட்டத்தை உடைத்து சமரசத் திட்டத்தை முன்வைத்து அதிமுகவை ஒன்று சேர்ப்பதில் இறங்கி இருக்கிறார் சசிகலா. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கடுமையான தோல்வியை சந்தித்து இருக்கின்ற சூழ்நிலையில், அடுத்ததாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அதன் பின்னர் நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்டவை அடுத்தடுத்து வருவதால் இந்த சமரசத்தை இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோர் நிராகரிக்க மாட்டார்கள் என நம்பிக் கொண்டிருக்கிறார் சசிகலா. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தோல்வி அடையும் என சசிகலா எதிர்பார்த்திருந்தார் இதனை அடுத்து தான் இந்த சமரசத் திட்டத்தை வெளிப்படையாக கூறியிருக்கிறார் என தெரிவிக்கிறார்கள்.