சிறையிலிருந்து சசிகலா எழுதிய கடிதம் !!!

0
70

சிறையில் இருந்து சசிகலா தன் கைப்பட எழுதிய கடித்ததால் ,பண மதிப்பிழப்பு  நடவடிவிக்கையின் போது பழைய ருபாய் நோட்டுகளை மாற்றி சொத்துக்களை வாங்கியது  அம்பலமாகியுள்ளது.

சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட அவருடன் தொடர்புடைய 187இடங்களில, 2017  நவம்பரில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர். அப்போது சசிகலாவின் அண்ணி இளவரிசியின் மகன் விவேக் வீட்டில், ஒரு கடிதத்தை வருமான வரி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

அந்த கடிதம் பற்றி விவேக்கிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். 2 மாதங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத ஒருவர், தனது வீட்டு காவலாளியிடம் சீலிடப்பட்ட கவர் ஒன்றை கொடுத்துவிட்டு சென்றதாக கூறியிருக்கிறார். அந்த கவரை காவலாளி தன்னிடம் தந்ததாக விவேக் கூறியிருக்கிறார்.அந்த காவலாளி யார் என்று விவேக்கிடம் அவர்கள் விசாரித்தனர். ஆனால் தன் வீட்டில் 2 காவலாளிகள் இருப்பதால் அவர்களில் யார் அந்த கவரை கொடுத்தார் என்பது தெரியவில்லை என்றும், அவர் கொடுத்த தேதியும் மறந்துவிட்டது என்றும் விவேக் கூறியிருக்கிறார். அந்த கடிதம் பற்றி சசிகலாவிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அது சாத்தியமாகவில்லை என்றும் விவேக் பதில் அளித்திருக்கிறார்.

ஆனாலும் மேற்கொண்டு நடந்த விசாரணையில், அந்த கடிதம் பெங்களூரு சிறையில் இருந்தபடி சசிகலாவால் எழுதப்பட்டதுதான் என்றும், 2017-ம் ஆண்டு செப்டம்பரில் அதை அவர் எழுதியிருக்கலாம் என்றும் சசிகலாவின் சட்ட ஆலோசகர் எஸ்.செந்தில் எழுத்து மூலம் உறுதி அளித்ததாக அதிகாரிகள் கூறினர்.

மேலும், செல்லாத ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி வாங்கப்பட்ட சொத்துகளை பட்டியலிட்டு அதை விவேக்கிற்கு தெரியப்படுத்துவதற்காக சசிகலா கடிதம் எழுதியிருந்ததாக வக்கீல் செந்தில் விசாரணை அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார்.

கடிதத்தில் சொத்துக்கள் தொடர்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளதால் இந்த கடிதத்தை முக்கிய ஆதாரமாக வைத்து விளக்கம் அளிக்கும்படி சசிகலாவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இருவரிடமும் தனித்தனியாக வாக்குமூலங்களை பெற்ற பிறகுதான் சசிகலாவுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். அதில், “பணமதிப்பு இழப்பு இருந்த காலகட்டத்தில் பழைய ரூபாய் நோட்டுகள் மூலம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சொத்துகளை நீங்கள் வாங்கியிருப்பது பல்வேறு நிலையில் எடுக்கப்பட்ட ஆதாரங்கள் மூலம் நிரூபணம் ஆகியிருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K