சசிகலாவுடன் இணையக் காத்திருக்கும் ஓபிஎஸ்! சமாளிப்பாரா எடப்பாடி பழனிச்சாமி!

0
74

சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் சசிகலாவை அதிமுகவுடன் இணைத்துவிட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி முயற்சி செய்தது. அதன் ஒரு பகுதியாகவே தேர்தலுக்கு முன்னர் தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா இதுதொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.இதற்கு ஒருவிதத்தில் ஓபிஎஸ் சம்மதம் தெரிவித்தாலும், ஈபிஎஸ் அதனை அறவே மறுத்துவிட்டார். அதாவது சசிகலா, அதிமுக இணைப்பு என்பதற்கு சாத்தியமே இல்லை என்று ஒரே போடாக போட்டு விட்டார்.

ஆனால் ஓபிஎஸ் சசிகலா அரசியலில் இருந்தால் நிச்சயமாக நாம் வெற்றி பெறுவது கடினம் அதனால் அவரை நாம் இணைத்துக் கொள்வதுதான் நல்லது என்று நினைத்து இருக்கிறார். இருந்தாலும் இதற்கு எடப்பாடி பழனிச்சாமி சம்மதம் தெரிவிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அத்துடன் எதிர்வரும் சட்டசபை தேர்தலில் சசிகலா அரசியல் களத்தில் நின்றால் நிச்சயமாக என்னுடைய வெற்றியை கேள்விக்குறிதான் என்று தெரிவித்திருக்கிறார்.

அதன் காரணமாகவே சசிகலா மீது இருக்கும் வழக்கை காரணம் காட்டி அமலாக்கத் துறை மூலமாக நடவடிக்கை எடுக்க துணிந்தது மத்திய அரசு. அதன் பிறகு அவர் மீது இருக்கின்ற அமலாக்கத்துறை வழக்கை வைத்து அவரிடம் சில தந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டு அவரை மொத்தமாக அரசியலில் இருந்து ஒதுக்கி வைத்தது மத்திய பாஜக.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் சசிகலா மற்றும் அதிமுக இணைப்பு விஷயத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா முதலில் கையில் எடுத்தபோது அதற்கு பச்சை கொடி காட்டியது ஓபிஎஸ் தான். ஆனால் ஆரம்பம் முதலே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடைசியாக அதிலிருந்து நழுவிக் கொண்டது எடப்பாடி பழனிச்சாமி.

ஆக அப்போதிருந்தே ஓபிஎஸ் சசிகலாவிற்கு ஆதரவாக செயல்படுகிறதோ என்ற எண்ணம் தமிழகம் முழுவதுமே உலாவ தொடங்கியது. ஆனால் ஆரம்பத்தில் சசிகலாவின் ஆதரவுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கைப்பற்றி இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல அவருடைய மனதில் ஒரு சில மாற்றங்கள் உருவாகி இருக்க வேண்டும். அதன் காரணமாகவே இருக்கின்ற சட்டசபை உறுப்பினர்கள் எல்லோரையும் தன் கைக்குள் வைத்துக்கொண்டு சசிகலாவிற்கு செக் வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி.

இந்தநிலையில், அண்மையில் அதிமுகவின் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது இதில் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுவதாக செய்திகள் வெளியானது. அந்த சமயத்தில் பன்னீர்செல்வம் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தனக்கு விட்டு தருமாறு கேட்டார். ஆனால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியும் உங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் உங்களுக்கு தானா என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார். இதனால் பன்னீர்செல்வம் அதிர்ச்சிக்குள்ளாகி விட்டார்.

அத்துடன் மட்டுமில்லாமல் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் எல்லோரும் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் தான் இருக்கிறார்கள். இவ்வாறான சூழ்நிலையில் தான் பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா உள்ளிட்டோர் ஒன்றிணைந்து களமிறங்க இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.முன்னரே சசிகலாவின் ஆதரவுடன் தான் ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார் என்ற கருத்து உலாவிக் கொண்டு இருக்கிறது. அந்த விதத்தில் இருவரும் அதிமுகவை கைப்பற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில் அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றுவதற்கு டிடிவி தினகரன் முயற்சி செய்து வருவதாகவும் தெரிகிறது.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமியின் ராஜதந்திர நடவடிக்கையின் முன்னால் அவர்களின் எண்ணம் ஈடேறாது என்று தெரிவிக்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள். கட்சியின் சட்டசபை உறுப்பினர்களும் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் எடப்பாடி பழனிச்சாமியின் பின்னால் இருக்கும் வரையில் அதிமுகவின் பதவியையும் சரி அதிமுகவின் தலைமை அலுவலகத்தையும் சரி சசிகலாவால் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்று சொல்லப்படுகிறது. ஆனால் இதையெல்லாம் மீறி சசிகலாவின் பின்னால் ஓபிஎஸ் இருக்கிறார் என்பது சற்று பீதியாக தான் இருக்கிறது.