விடுதலையாகும் சசிகலா வரவேற்க தயாராகும் ஆதரவாளர்கள் !பரபரப்பான தமிழகம்!

0
63

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா எதிர்வரும் 27ஆம் தேதி சிறையிலிருந்து வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அவர் சிறையில் இருந்து நேரடியாக ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அங்கே சபதம் எடுத்துவிட்டு அதன் பிறகு வீட்டிற்கு போவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு நான்கு வருடங்கள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. அவர் கர்நாடகாவில் இருக்கின்ற பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை அனுபவித்து வருகின்றார்.

அவருடைய தண்டனை காலமானது முடிவடைய இருக்கும் நிலையில், அவருக்கான அபராதத் தொகையை அவர் செலுத்தி விட்டதால் ஜனவரி மாதம் 27ஆம் நாள் அவர் விடுதலை செய்யப்படுவார் என்று சொல்லப்படுகின்றது. விசாரணையின்போது 129 நாட்கள் சசிகலா சிறையில் இருந்த காரணத்தால் அந்த நாட்களை தண்டனையிலிருந்து கழித்துவிட வேண்டும் என்று சிறை நிர்வாகத்திடம் சசிகலா தரப்பு கோரிக்கையை வைத்தது. ஆனால் அது தொடர்பாக சிறை நிர்வாகம் பதில் எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், ஜனவரி மாதம் 29 ஆம் நாள் சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்று தெரிவித்த படுவதால் அவரை வரவேற்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் ஒரு மிகப் பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்து இருக்கிறார்கள். சிறைக்குப் போன போது சசிகலா மெரினாவில் இருக்கின்ற ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு போய் சபதம் ஏற்றுக்கொண்டு சென்றார். அதேபோல சிறையில் இருந்து வெளியே வரும் சசிகலா மெரினா கடற்கரைக்குச் சென்று ஜெயலலிதாவின் நினைவிடத்தில் சபதம் எடுத்துக் கொண்டு தான் வீட்டிற்கு செல்வார் என்று தெரிவிக்கிறார்கள். இதன் காரணமாக அதிமுகவினர் கடும் அதிர்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.