25 எம்எல்ஏக்களுக்கு வலை வீசும் சசிகலா.. ஆடிப்போன எடப்பாடி!! அதிமுகவை கைப்பற்ற பலே திட்டம்!

0
144
Sasikala throws a net for 25 MLAs. Pale plan to capture AIADMK!
Sasikala throws a net for 25 MLAs. Pale plan to capture AIADMK!

25 எம்எல்ஏக்களுக்கு வலை வீசும் சசிகலா.. ஆடிப்போன எடப்பாடி!! அதிமுகவை கைப்பற்ற பலே திட்டம்!

அதிமுக ஒற்றை தலைமை என்று விவகாரம் இன்றளவும் சமரசம் வராமல் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் நடுவில் சசிகலா எந்த மூலைக்கு சென்றார் என்பதே தெரியவில்லை.

ஆனால் சசிகலா சைலன்டாக இருந்து கொண்டு பல வேலைகளை செய்து வருவதாக அரசியல் சுற்று வட்டாரங்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைய வேண்டும் என்பதே பாஜக தொடர்ந்து கூறிவரும் நிலையில் நடுவில் சசிகலாவை பற்றி எதுவும் கண்டு கொள்ளவில்லை.

ஆனால் ஓபிஎஸ்  இபிஎஸ் ஐ  சற்று நெருங்கி வருவதாகவும் அதன் முதல் கட்டம் சமீப காலமாக சசிகலாவிடம் பேசாமல் இருந்து வருவதாகவும் கூறுகின்றனர்.

ஓபிஎஸ் மட்டும் இன்றி அவரை சார்ந்த சாதியினரும் சசிகலாவிடம் பேசுவதை தவிர்த்து வருகிறார்களாம். சிலர் மட்டுமே அரசியல் குறித்த விவரங்களை அவ்வபோது சசிகலாவிடம் தெரிவித்து வருவதாகவும் கூறுகின்றனர்.

அந்த வகையில் திவாகரன் தான் சமீப காலமாக சசிகலாவுடன் அதிக நெருக்கத்தில் உள்ளாராம்.

ஒற்றை தலைமை விவகாரத்தால் எம்எல்ஏக்களிடம் அதிருப்தி நிலவி வரும் வேலையில், பலர்  ஆளும் கட்சி பக்கம் செல்லலாமா அல்லது சசிகலா பக்கம் செல்லலாமா என்று யோசனை செய்து வருவதாக கூறுகின்றனர்.

குறிப்பாக சசிகலா பக்கம் செல்ல வேண்டும் என்றால் பொருளாதார ரீதியாக பல எதிர்பார்ப்புகள் எம்எல்ஏக்களிடம் உள்ளதாகவும், தற்பொழுது சசிகலாவின் சொத்துக்கள் சொத்து குவிப்பு வழக்கில் முடக்கப்பட்டுள்ளதால் அதனை விற்க முடிவு செய்துள்ளதாகவும்  தகவல்கள் வெளிவந்துள்ளது.

சொத்துக்களை விற்றாவது அந்த 30 எம்எல்ஏக்களையும் தங்கள் பக்கம் இழுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் சசிகலா குறியாக இருக்கிறார் என்பது இதிலிருந்து தெரிய வருகிறது.

முன்பெல்லாம் தனிப்பட்ட முறையில் கட்சி நிர்வாகிகளிடம் பேசி வந்த சசிகலா இப்பொழுது நேரடியாகவே பேசி வருகிறாராம்.

அதேபோல கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ததில், பலரும் சசிகலாவிடம் கட்சி நமக்கு கிடைக்குமா என்று பல கேள்விகளை கேட்டுள்ளனர்.

இதற்கு சசிகலா தற்பொழுது ஒற்றை தலைமை விவகாரத்தால் கட்சி நமது பக்கம் வர பல வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். அது மட்டும் இன்றி ஆளும் கட்சியை எதிர்த்து மீண்டும் ஆட்சி பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஒற்றை தலைமை விவகாரத்தால் முடிவு கிடைக்காத நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இருந்து வரும் சமயத்தில் தற்பொழுது பணத்தைக் காட்டி 30 எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் சசிகலா இறங்கி உள்ளது இவருக்கு பெரும் அடியாகவே உள்ளது.

தற்பொழுது அதன் முதல் கட்ட பணியாக வரும் ஒன்பதாம் தேதி சென்னையில் பல வழிபாட்டுத் தளங்களுக்கு சென்று வழிபட்டு விட்டு, தொண்டர்களை சந்திக்க உள்ளதாகவும் அவ்வாறு வரும் சசிகலாவை அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் வரவேற்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறுகின்றனர்.

இதனால் எடப்பாடிக்கு அடி சறுக்கும் நிலை உருவாகியுள்ளது. ஒரு பக்கம் திமுக வளர்ச்சி அடைந்து கொண்டே போகும் பட்சத்தில் அதனை எதிர்க்கும் அதிமுக ஒற்றை தலைமை கட்சி பிரிவினை என்று பின்னோக்கி செல்கிறது.இந்த சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்திக் கொண்டு பாஜக எதிர்க்கட்சியாக ஆக பல முயற்சிகளை செய்து வருகிறது.

இந்த நிலையில் சசிகலா நினைத்தால் மீண்டும் ஒன்றிணைந்து சமராசமாக கட்சி நடத்த இருக்கும் பட்சத்தில் அதற்கான கால அவகாசம் அதிக அளவு எடுத்துக் கொள்ளப்படும். அவ்வாறு மாறப்படும் சூழலில் மக்கள் அதனை எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள் என்பதில் பெரும் சந்தேகம் உள்ளது.

அதுமட்டுமின்றி இவர்களின் போக்கை பார்த்துக்கொண்டு அதிமுக நிர்வாகிகள் பலர் ஆளும் கட்சியில் சேர்ந்து வருவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் 2026 ஆம் ஆண்டு வரும் சட்டமன்ற தேர்தலை ஆளும் கட்சியை எதிர்க்க தற்பொழுது உள்ள கட்சிகள் பெரும் முயற்சிகளை எடுக்க வேண்டும்.